Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது தான் காரணமா? ராயுடு வாழ்க்கையில் விளையாடிய முன் கோபம்.. திறமைக்கு மதிப்பு இல்லாமல் போச்சு

மும்பை : 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது இந்திய அணியில் நடு வரிசையில் பேட்ஸ்மேனுக்கு பற்றாக்குறை இருந்தது.

இதனை கருத்தில் கொண்டு அம்பத்தி ராயுடு அந்த இடத்திற்காக தயார் செய்யப்பட்டார். உலகக்கோப்பை தொடர்க்கும் முன்பு கிட்டத்தட்ட 18 ஒரு நாள் போட்டிகளுக்கு மேல் ராயுடு நடு வரிசையில் விளையாடினார்.

Ambati Rayudu reveals why he was excluded from ICC odi world cup 2019

இதற்கு காரணம் 2018 ஆம் ஆண்டு ராயுடு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் இந்திய அணிக்கு அவர் திரும்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அம்பத்தி ராயுடு நடு வரிசையில் இந்திய அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது தேர்வுக்குழுவின் தலைவர் எம் எஸ் கே பிரசாத் ராயுடு பெயரை அதிரடியாக நீக்கி அந்த இடத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சேர்த்தார்.

இதற்கு காரணம் விஜய் சங்கர் வேகப்பந்து வீச்சு பில்டிங் பேட்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்படக்கூடிய 3d பிளேயர் என்றும் எம் எஸ் கே பிரசாத் கூறியிருந்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் இந்த உலகக் கோப்பையை பார்க்க தாம் 3டி கண்ணாடியை வாங்கி இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் தான் ஏன் உலக கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பது குறித்து ராயுடு முதல் முறையாக மௌனத்தை கலைத்துள்ளார்.

அதில் தாம் கிரிக்கெட் விளையாடிய தொடக்க காலத்தில் தேர்வு குழு உறுப்பினராக இருந்த ஒரு நபருடன் சேர்ந்து விளையாடினேன். அப்போது எனக்கும் அந்த நபருக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு அவர் என்னை உலககோப்பை அணியிலிருந்து நீக்கி இருக்கலாம் என்று ராயுடு கூறியுள்ளார்.

ராயுடுக்கு முன் கோபம் அதிகம் என்று ஏற்கனவே தோனி கூறி இருந்த நிலையில் ஆரம்பகாலத்தில் சக அணி வீரர்களுடன் ஏற்பட்ட மோதல் பின் அவருக்கு பிரச்சனையாக மாறி இருக்கிறது. எனினும் திறமைக்கு மதிப்பளிக்காமல் ராயுடு உடன் ஏற்பட்ட மோதலை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு குழுவினர் இவ்வாறு செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியின் ஆழ்த்தி இருக்கிறது.

Story first published: Wednesday, June 14, 2023, 19:35 [IST]
Other articles published on Jun 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+