Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராகுல் சரியில்லை.. அவருக்கு பதிலா அம்பதி ராயுடுவை இறக்கினா என்ன? ஹர்பஜன் கேள்வி

Recommended Video

அம்பதி ராயுடுவை அணியில் சேர்க்கலாமே?.. ஹர்பஜன் கேள்வி- வீடியோ

மெல்போர்ன் : இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியில் ராகுல் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ராகுல் சமீப காலமாக அணியில் அதிக வாய்ப்பு பெற்றும், ரன் குவித்து தன்னை நிரூபிக்கவில்லை. இவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு அம்பதி ராயுடுவை களம் இறக்கலாமே என ஹர்பஜன் கருத்து கூறியுள்ளார்.

கிடைத்த வாய்ப்புகள் வீண்

கிடைத்த வாய்ப்புகள் வீண்

கே எல் ராகுல் இந்திய டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். இதில் ஒருநாள் அணியில் அவரது இடம் நிரந்தரமில்லாமல் உள்ளது. டி20 அணியில் அதிக வாய்ப்பு பெற்று வருகிறார். எனினும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

தன் இடத்தை மாற்றிய கோலி

தன் இடத்தை மாற்றிய கோலி

முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இன்னிங்க்ஸில்கேப்டன் கோலி தான் வழக்கமாக இறங்கும் மூன்றாவது இடத்தை ராகுலுக்கு அளித்துவிட்டு தான் நான்காவது இடத்தில் களம் இறங்கினார்.

ராகுல் தொடர்ந்து சொதப்பல்

ராகுல் தொடர்ந்து சொதப்பல்

ஆனால், துரதிர்ஷ்டவசமாக ராகுல் 13 ரன்களிலும், கோலி 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கோலி தனக்கு சாதகமான பேட்டிங் இடத்தை மாற்றாமல் ஆடி இருந்தால் ஒருவேளை இந்தியா அந்த போட்டியில் வென்று இருக்கலாம். அதே சமயம், பல முறை வாய்ப்பு பெற்றும் சொதப்பி வரும் ராகுலுக்கு இனியும் அணியில் இடம் அளிக்க வேண்டுமா? என்ற கேள்வி ரசிகர்களால் எழுப்பப்படுகிறது.

அம்பதி ராயுடுவை சேர்க்கலாமே

அம்பதி ராயுடுவை சேர்க்கலாமே

இந்த நிலையில் ஹர்பஜன் சிங் இது பற்றி தன் கருத்தை கூறியுள்ளார். அதன் படி, அம்பதி ராயுடு ஒருநாள் போட்டிகளில் நான்காம் இடத்தில் இறங்க சரியான ஆள் என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது அவரையே ஏன் டி20 போட்டிகளிலும் நான்காம் இடத்தில் இறக்கக் கூடாது. அம்பதி ராயுடு உலகக்கோப்பை அணியில் நிச்சயம் இடம் பெறுவார் என கூறப்படும் நிலையில், அவருக்கு டி20 அணியிலும் இடமளித்தால் அதிக சர்வதேச போட்டிகளில் அவர் ஆடுவார். அது அணிக்கு நன்மை தானே என கூறியுள்ளார் ஹர்பஜன்.

ஹர்பஜன் சொல்வது நியாயமாகத் தான் இருக்கு.. ரவி சாஸ்திரியும், கோலியும் தான் பதில் சொல்லணும்

Story first published: Friday, November 23, 2018, 12:08 [IST]
Other articles published on Nov 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+