Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரேயாஸ் ஐயர் செய்த 2 தவறுகள்.. பவுலிங் மாற்றத்தில் சொதப்புகிறார்.. அம்பாதி ராயுடு கொடுத்த அட்வைஸ்!

மும்பை: நியூசிலாந்து டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி செயல்பாடுகள் குறித்து அம்பாதி ராயுடு விமர்சித்துள்ளார். குறிப்பாக கிளென் பிலிப்ஸ் களத்திற்குள் வந்த போது, பார்ட் டைம் ஸ்பின்னரான அபிஷேக் சர்மாவை அட்டாக்கில் கொண்டு வந்ததை ராயுடு கடுமையாக சாடி இருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது.

Ambati Rayudu

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு களத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த சில முக்கிய முடிவுகளே காரணமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அம்பாதி ராயுடு பேசுகையில், கிளென் பிலிப்ஸ் 5 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த போது பார்ட் டைம் ஸ்பின்னரான அபிஷேக் சர்மா அட்டாக்கில் கொண்டு வரப்படுகிறார். அப்படியான திட்டங்கள் மிகவும் பழையது.

ஏராளமான முறை முயற்சித்து தோல்வி அடைந்த ஒரு திட்டம். டி20 கிரிக்கெட்டின் தொடக்க காலத்தில் இப்படியான வியூகங்கள் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது பார்ட் டைம் ஸ்பின்னார் வந்தால், அந்த 6 பந்துகளில் அதிக ரன்களை விளாச வேண்டும் என்பதில் பேட்ஸ்மேன்கள் தெளிவாக இருக்கின்றனர். அதுதான் இன்றைய ஆட்டத்தில் நடந்தது.

அபிஷேக் சர்மா விட்டுக் கொடுத்த 13 ரன்கள் ஆட்டத்தின் மொமண்ட்டை மாற்றிவிட்டது. அதேபோல் மற்ற கேப்டன்களை போல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு திறமையான பவுலர்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் பிரின்ஸ் யாதவ் போன்ற இளம் பவுலரிடம் ஸ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கையாக பந்தை கொடுப்பதை பார்க்க முடிகிறது.

ஏனென்றால் அவரால் பிரின்ஸ் யாதவ் போன்றவர்களை வேறு மாதிரி பயன்படுத்த முடியும். அதேபோல் புவனேஷ்வர் குமாருக்கு 3வது ஓவரை தொடர்ச்சியாக கொடுத்திருக்க கூடாது. ஒரு செட்டிலான பேட்ஸ்மேன் இல்லாத போது புவனேஷ்வர் குமாரை அட்டாக்கில் கொண்டு வந்திருக்க வேண்டும். டிம் சீஃபெர்ட் ஏற்கனவே புவியை எதிர்த்து 2 ஓவர்கள் விளையாடிவிட்டார்.

அதனால் புவனேஷ்வர் குமாருக்கும் அது கடினமாக இருந்திருக்கும். ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கம்பீர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருக்கும் மெசேஜ்கள் கொடுப்பது பிடிக்காது என்று நினைக்கிறேன். களத்தில் அவருக்கு அதிக மெசேஜ் கொடுப்பதை விரும்புவதில்லை. ஆனால் காலம் மாறி கொண்டிருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயரும் மாறிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, November 1, 2026, 23:21 [IST]
Other articles published on Nov 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+