Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அம்பத்தி ராயுடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு? ஐபிஎல் சீசனில் இனி பங்கேற்க போவது இல்லை? காரணம் என்ன?

மும்பை: ஐபிஎல் 15வத சீசன் தொடருக்கு பிறகு கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் மூலம் புகழ் பெற்று இந்திய அணியில் இடம்பிடித்ததில் அம்பத்தி ராயுடுவும் ஒருவர்.

முதலில் மும்பை, பிறகு சென்னை என இரு அணியிலும் தவிர்க்க முடியாத வீரராக விளங்கிய அம்பத்தி ராயுடு, கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டார்.

ராயுடு ஓய்வு

ராயுடு ஓய்வு

36 வயதான அம்பத்தி ராயுடு, ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இடம் கிடைக்காத நிலையில், அவர் இந்த முடிவை எடுத்தார். இந்த நிலையில், தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக ராயுடு விளையாடி வந்தார்.

2 பெரிய அணிகள்

2 பெரிய அணிகள்

இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 13 ஆண்டுகளாக 2 பெரிய அணியில் விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன். கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறினார். மும்பை அணிக்காக 2416 ரன்களும், 14 அரைசதங்களும் அடித்துள்ள ராயுடு, சிஎஸ்கே அணிக்காக 1771 ரன்களும், 1 சதமும், 8 அரைசதமும் அடித்துள்ளார்.

Recommended Video

IPL போட்டிகளில் புதிய சாதனை.. Dhoni-ன் மற்றொரு மைல்கல்
ஃபார்ம் அவுட்

ஃபார்ம் அவுட்

கடந்த சில போட்டியில் அம்பத்தி ராயுடு தனது பழைய ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். வயதும் ஆவதால் இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் அம்பத்தி ராயுடு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியின் தவிர்க்க முடியாத வீரராக அம்பத்தி ராயுடு விளங்கினார்.

பொது மன்னிப்பு பெற்றவர்

ஐபிஎல் தொடருக்கு முன்பு கபில்தேவ் நடத்திய ஐசிஎல் டி20 தொடரில் பங்கேற்று பிசிசிஐயால் தடை பெற்ற அம்பத்தி ராயுடு, பிறகு பொது மன்னிப்பு பெற்று ஐபிஎல் தொடரில் களமிறங்கி அதில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தவர். இந்தியாவுக்காக 55 ஒருநாள் போட்டியில் விளையாடி 1694 ரன்களும், 6 டி20 போட்டியிலும் ராயுடு விளையாடி இருக்கிறார்.இந்த நிலையில் ஓய்வு குறித்து வெளியிட்ட டிவிட்டை அவர் நீக்கிவிட்டார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Story first published: Saturday, May 14, 2022, 22:15 [IST]
Other articles published on May 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+