இவரு பவுலிங் போட்டா என்ன நடக்கும் தெரியுமா.. அமெரிக்க சீரியல் வரை ட்ரெண்டான அஸ்வின்!

Posted By:

சென்னை: கிரிக்கெட் வீரர் அஸ்வினின் பவுலிங் குறித்து அமெரிக்காவில் வரும் 'தி பிக் பேங்க் தியரி' என்ற சீரியலில் பேசப்பட்டு இருக்கிறது. அதில் உள்ள கதாப்பாத்திரங்கள் கிரிக்கெட் பார்க்கும் போது அஸ்வின் குறித்து பேசி உள்ளனர்.

மேலும் அதில் பாண்டிய, புவனேஷ்வர் குமார் குறித்தும் கிண்டலாக பேசி இருக்கிறார்கள். தற்போது இதன் வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

அமெரிக்கா முழுக்க அஸ்வின் டிரெண்ட் ஆகிவிட்டார் என ரசிகர்கள் குதூகலத்தில் ஆடிக்கொண்டு இறுகின்றனர். இந்திய அணியில் மீண்டும் தேர்வாகி இருக்கும் அஸ்வினுக்கு இது இன்னொரு சர்ப்ரைஸ் கிப்ட்.

 புகழ்பெற்ற தி பிக் பேங்க் தியரி சீரியல்

புகழ்பெற்ற தி பிக் பேங்க் தியரி சீரியல்

சீரியல்களில் சமீபத்திய வைரல் 'தி பிக் பேங்க் தியரி' தான். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த சீரியலில் நான்கு கதாப்பாத்திரங்கள் இருக்கிறார்கள். இதில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவராக நடித்து இருக்கிறார். அந்த கதாப்பாத்திரத்திற்கு 'ராஜேஷ் கோத்தரப்பள்ளி' என்று பெயரிட்டு உள்ளனர். இவர் அடிக்கடி இந்தியா குறித்து காமெடியாக பேசுவார். சென்ற வார எபிசோடில் கூட திருவனந்தபுரம் குறித்து பேசி இருந்தார்.

அஸ்வின் பவுலிங் போட்ட என்ன நடக்குமோ

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் குறித்து பேசி இருந்தார்கள். எல்லோரும் உட்கார்ந்து கிரிக்கெட் பார்க்கும் போது ராஜேஷ் ''அதோ இருக்காரே அவர்தான் அஸ்வின். அவர் மட்டும் பந்து போட்ட பாண்டியா கூட புவனேஷ்வர்குமாரா ஆகிடுவார்'' என்று வித்தியாசமாக பேசி இருந்தார். இந்த வசனம் புரியதா மாதிரி இருந்தாலும் இதன் மூலம் அமெரிக்கா முழுக்க அஸ்வின் வைரல் ஆகியிருக்கிறார்.

ஒரே நாள்ல ஓஹோன்னு டிரெண்ட்

இந்த வீடியோ குறித்து இவர் காமெடியாக கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் ''அவர் சொல்றதுல எந்த அர்த்தமும் இல்லை. ஆனா அஸ்வின், இப்ப அமெரிக்கால நீங்கதான் புதிய ஸ்டார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அடுத்து நேரா அதிபர்தான்

இந்த வீடியோவுக்கு அஸ்வினின் வெறித்தனமான ரசிகர் கமெண்ட் செய்து இருக்கிறார். அதில் ''ப்பா செம ரீச். அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரோட நாடாளுமன்ற பேச்சுல அஸ்வின் பத்தி சொல்லுவார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, November 13, 2017, 15:54 [IST]
Other articles published on Nov 13, 2017
Please Wait while comments are loading...