Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாலிவுட் நடிகர் அமீர்கான் 3வது திருமணம்.. நேரில் பங்கேற்று இர்பான் பதான் நெகிழ்ச்சி

மும்பை: பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் கௌரி ஸ்ப்ராட் ஜோடியின் திருமணம் இன்று மும்பையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மும்பையில் கனமழை பெய்த போதிலும், திட்டமிட்டபடி திருமண விழாக்கள் நடைபெற்றன. இந்த விழாவில் அசுதோஷ் கோவாரிகர், வீர் தாஸ், இர்பான் பதான், அரசியல் தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி உள்ளிட்ட திரைத்துறை மற்றும் அரசியல் சார்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Amir Khan Wedding

நடிகர் அமீர்கான் தரப்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்களின்படி, இந்த திருமணம் மிகவும் எளிமையாகவும் ஆடம்பரமின்றியும் நடந்துள்ளது. திருமணப் பதிவேட்டில் அமீர்கான் மற்றும் கௌரி ஸ்ப்ராட் கையெழுத்திடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தில் கௌரியின் மகன் தம்பதியருக்கு நடுவிலும், அமீர்கானின் மகன் ஆசாத் அவரது அருகிலும் அமர்ந்திருக்கிறார்கள்.

IND vs ENG: முட்டாள் தனமான முடிவு.. விளையாடுறீங்களா? கம்பீரை சாடிய சஞ்சய் மஞ்சுரேக்கர்

IND vs ENG: முட்டாள் தனமான முடிவு.. விளையாடுறீங்களா? கம்பீரை சாடிய சஞ்சய் மஞ்சுரேக்கர்

"அன்புள்ள அமீர் பாய் மற்றும் கௌரி, உங்கள் திருமணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் இருவரது வாழ்க்கையும் அன்பு, மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் ஒற்றுமையால் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன். உங்கள் அழகான பயணத்தை இறைவன் எல்லையற்ற மகிழ்ச்சியுடனும் ஆசிகளுடனும் ஆசீர்வதிக்கட்டும்," என்று இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அமீர்கானுக்கு இது மூன்றாவது திருமணமாகும். முன்னதாக, அவர் 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தாவை மணந்தார். இந்த தம்பதிக்கு ஜூனைத் கான் மற்றும் ஈரா கான் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் 2002 ஆம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.

அதன்பின்னர், 2005 இல் திரைப்பட தயாரிப்பாளர் கிரண் ராவை அமீர்கான் மணந்தார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ள நிலையில், 2021 ஆம் ஆண்டு இந்த ஜோடி பிரிந்தது. இருப்பினும், இருவரும் இணைந்து தங்களது மகனை வளர்த்து வருகின்றனர்.

பெங்களூருவைச் சேர்ந்த அழகு மற்றும் ஆரோக்கியத் துறை நிபுணரான கௌரி ஸ்ப்ராட்டை, அமீர்கான் கடந்த 2025 ஆம் ஆண்டு தனது 60 வது பிறந்தநாளின் போது ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது, தாங்கள் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார். கௌரிக்கு ஏற்கனவே முந்தைய திருமணத்தின் மூலம் ஒரு மகன் உள்ளார்.

IND A vs SL A: இந்தியாவுக்கு ஒரு சூப்பர் பவுலர் கிடைச்சிட்டாரு.. 2வது டெஸ்ட்டில் அபார வெற்றி

IND A vs SL A: இந்தியாவுக்கு ஒரு சூப்பர் பவுலர் கிடைச்சிட்டாரு.. 2வது டெஸ்ட்டில் அபார வெற்றி

முன்னதாக தனது திருமணம் குறித்துப் பேசியிருந்த அமீர்கான், "ஜூலை 5 அன்று எனது திருமணம் வீட்டில் உள்ள நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் நடைபெறும். எங்கள் புதிய பயணத்திற்கு அனைவரின் ஆசிகளையும் வேண்டுகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Story first published: Sunday, July 5, 2026, 18:39 [IST]
Other articles published on Jul 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+