
இங்கிலாந்து குடியுரிமை
இந்த சூழலில், அவர் இங்கிலாந்து குடியுரிமையுடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரின் 2வது சீசன் முதல் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதுவரை பாகிஸ்தானை சேர்ந்த அசார் முஹ்மூத் மட்டுமே ஐபிஎல்-ல் பங்கேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு விளையாடியுள்ளார். அப்போதும் கூட அவர் இங்கிலாந்து குடியுரிமையுடன் தான் பங்கேற்றார். எனவே, அமீரும் ஐபிஎல்-லில் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இன்னும் வளரணும்
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் சோயப் அக்தர் PTVக்கு அளித்த பேட்டியில், "சில நேரங்களில் உங்களுக்கு நல்ல நாட்கள் அமையும், சில சமயங்களில் உங்களுக்கு மோசமான நாட்களும் அமையும். தன்னை பாதுகாக்க மிக்கி ஆர்தர் எப்போதும் இருக்க மாட்டார் என்பதை அமீர் உணர்ந்திருக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் இன்னும் வளர வேண்டும் என்பதை காட்டுகிறீர்கள். இதை அமீருக்காக சொல்கிறேன். நீங்கள் இன்னும் வளர வேண்டும்.

பாடம் படிக்கணும்
அணியின் நிர்வாகம் உங்களுக்கு ஏற்ப செயல்படவில்லை என்றால், நீங்கள் உங்களது செயல்திறனையும் உழைப்பின் அளவையும் உயர்த்த வேண்டும். பாகிஸ்தான் அணி நிர்வாகம் ஹபீசுக்கு எதிராகவும் செயல்பட்டது. ஆனால் ஹபீஸ் என்ன செய்தார்? ரன்களை குவித்தார். வேறொன்றும் செய்யவில்லை. ஹபீஸிடம் இருந்தும் அமீர் பாடம் கற்க வேண்டும்" என்று சற்று காட்டமாகவே பேசியுள்ளார்.

நேர்மாறான கருத்து
முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்த பேட்டியில், "அமீர் மிகவும் அனுபவம் வாய்ந்த பவுலர். குறிப்பாக, டி20 கிரிக்கெட்டில் உலகின் மிகச் சிறந்த பவுலராக விளங்குகிறார். அவர் பாகிஸ்தானின் உலக டி20 அணியில் இருக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன். சமீப காலமாக அமீர் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் யாரும் தலையிட உரிமை கிடையாது. மற்ற வீரர்களும் தான் ஓய்வு பெறுகிறார்கள். ஏன் அவர்களைப் பற்றி பேசாமல், இவரை மட்டும் பற்றியே பேசுகிறீர்கள்?" என்று பேசியிருந்த நிலையில், அக்தர் அதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











