Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 முறை ஐபிஎல் ஹாட்ரிக் எடுத்த வீரரை தூக்கிய கங்குலி.. DC அணியின் புதிய ஸ்பின் கோச் ஆன அமித் மிஸ்ரா

டெல்லி: 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணி தனது பயிற்சியாளர்கள் குழுவை முற்றிலும் மாற்றி அமைத்து வருகிறது. தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி சிறந்த முன்னாள் வீரர்களை உதவி பயிற்சியாளர்களாக நியமித்து வருகிறார். அந்த வகையில், புதிய சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அமித் மிஸ்ரா அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் இந்த அதிரடி அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டது. ஏற்கனவே தலைமைப் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி, உதவிப் பயிற்சியாளராக யுவராஜ் சிங் மற்றும் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக சமிந்தா வாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அமித் மிஸ்ராவும் அவர்களுடன் இணைந்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அமித் மிஸ்ரா வைத்துள்ளார். இவர் 2008-ல் டெல்லி டேர்டெவில்ஸ், 2011-ல் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் 2013-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என 3 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தினார். 2008 முதல் 2024 வரை ஐபிஎல் அரங்கில் விளையாடிய இவர், 17 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்தது உட்பட மொத்தம் 174 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்.

Amit Mishra Appointed as Delhi Capitals Spin Bowling Coach Ahead of IPL 2027

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் அமித் மிஸ்ராவுக்கும் இடையே மிக நீண்ட கால பந்தம் உண்டு. 2008 முதல் 2010 வரையிலும், பின்னர் 2015 முதல் 2021 வரையிலும் இரண்டு காலகட்டங்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக மட்டும் 99 போட்டிகளில் களம் கண்டு 106 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்காகவும் இவர் விளையாடியுள்ளார். தற்போது தான் பல ஆண்டுகள் ஆடிய அதே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குப் பயிற்சியாளராக அவர் திரும்பியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

IND vs NZ முதல் போட்டி பிளேயிங் 11.. வருண் வந்ததால் சீனியர் பவுலர் நீக்கம்.. வைபவ் சூர்யவன்ஷி நிலை?

IND vs NZ முதல் போட்டி பிளேயிங் 11.. வருண் வந்ததால் சீனியர் பவுலர் நீக்கம்.. வைபவ் சூர்யவன்ஷி நிலை?

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 என மொத்தம் 68 போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் 76 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். ஒருநாள் போட்டியில் 48 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்ததே இவரது சிறந்த பந்துவீச்சாகும். மேலும் 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தார். முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மிஸ்ராவின் அபார அனுபவம் மிகப்பெரிய பலமாக அமையும்.

Story first published: Thursday, October 22, 2026, 8:28 [IST]
Other articles published on Oct 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+