
5 ஆண்டுகள்
அமித் மிஸ்ரா விளையாடும் காலத்தில் ஹிந்தியை தவிர வேறு எதுவும் பேசியது இல்லை.ஆனால் தற்போது ஆங்கிலத்தில் பிச்சி உதறுகிறார். இதனால் அவர் அட்மின் வைத்து பணியாற்றுகிறார் என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே இருந்தது. அமித் மிஸ்ரா இந்திய அணிக்காக கடைசியாக 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.

சுவாரஸ்ய உதவி
அதன் பிறகு அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அமித் மிஸ்ரா தற்போது ரசிகர்களுக்காக செய்த காரியம் ட்ரெண்டாகி இருக்கிறது. ரசிகர்களின் கேள்விக்கு அவ்வப்போது பதில் அளித்து வரும் அமீத் மிஸ்ரா இன்று ஒரு சுவாரசியமான பதிவை எதிர்கொண்டார் அதில் ஆதித்ய குமார் என்ற ரசிகர் ஒருவர் தன் காதலியை வெளியே அழைத்துச் சென்று டேட்டிங் செய்ய இருக்கிறேன்.

ரூ500 உதவி
அதற்கு என்னிடம் காசு இல்லை உங்களால் முடிந்தால் ஒரு 300 ரூபாயை அனுப்பி வையுங்கள் என்று நம்பருடன் மிஸ்ராவுக்கு அனுப்பி இருந்தார். இதை பார்த்த அமித் மிஸ்ரா உங்களுடைய டேட்டிங் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் சந்தோஷமாக இருங்கள் என்று கூறி 500 ரூபாயை ரசிகர்களுக்கு இணைய வழியாக பணத்தை அனுப்பி இருக்கிறார்.

வரிசையில் ரசிகர்கள்
அமித் மிஸ்ராவின் இந்த செயல் ரசிகர்களை குதுகலப்படுத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் வரிசையாக அமித் மிஸ்ராவிடம் பண உதவி கேட்டு வருகின்றனர். அமித் மிஸ்ரா கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக இன்னும் ஓய்வு பெறவில்லை தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி சேனலில் அமித் மிஸ்ரா கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











