Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மே அமிதாப் ப‌ச்ச‌ன் போல் ர‌ஹா ஹுன்... இந்தியா-பாக். கிரிக்கெட்டை டிவியில் வர்ணிக்கிறார் அமிதாப்!

மும்பை: உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் விளையாடும் கிரிக்கெட் போட்டியை ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நேரடி வர்ணனை செய்ய உள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பி-பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வரும் 15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அமிதாப், கபில்தேவ்

அமிதாப், கபில்தேவ்

வழக்கமாக கிரிக்கெட் சார்ந்தவர்களே அந்த சேனலில் வர்ணனை செய்வார்கள். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் போட்டி வர்ணனையாளர் டீமில், அமிதாப்பச்சனும் இடம் பெற்றுள்ளார். அவருடன், ஹர்ஷா போக்லே, கபில்தேவ், ஷோயிப் அக்தர் ஆகியோரும் வர்ணனை செய்ய உள்ளனர்.

சினிமா, கிரிக்கெட்

சினிமா, கிரிக்கெட்

இதுகுறித்து அமிதாப் கூறியதாவது: நமது நாடு மிகவும் உணர்ச்சிவசப்படுவது சினிமா மற்றும் கிரிக்கெட்டுக்காகத்தான். என்னை பொறுத்தவரையில் இது இரண்டிலும் என்னால் பங்களிக்க முடிகிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். நான் இந்த வர்ணனையில் சேர்ந்து கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன் என்றார்.

ஷமிதாப் படத்தில் அமிதாப் பாடுகிறார்

ஷமிதாப் படத்தில் அமிதாப் பாடுகிறார்

அமிதாப்பச்சன் மற்றும் தனுஷ் நடித்து பிப்ரவரி 6ம்தேதி வெளியாகும் ஷமிதாப் படத்தில் அமிதாப்பச்சன் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார்.

பட விளம்பரத்துக்கும் உபயோகம்

பட விளம்பரத்துக்கும் உபயோகம்

தற்போது கிரிகெட் வர்ணனையாளராகவும் மாற உள்ளார். கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்துவதோடு, ஷிமிதாப் படத்தின் விளம்பரத்திற்காகவும் இந்த வர்ணனையை பயன்படுத்திக்கொள்ள அமிதாப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Wednesday, February 4, 2015, 11:23 [IST]
Other articles published on Feb 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+