Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி சாதனையில் 'ஆம்லேட்' போட்ட ஆம்லா.... குறைந்த போட்டிகளில் 20 சதங்கள்!

கான்பெரா: தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா அயர்லாந்துக்கு எதிராக இன்று அடித்த செஞ்சுரி மூலம் குறைந்த போட்டியில் 20 சதங்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுகிறார். முன்னதாக, விராட் கோஹ்லியிடம் இந்த சாதனை இருந்து வந்தது.

உலக கோப்பையில் இன்று, தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப் பரிட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா சிறப்பாக ஆடி, 100 பந்துகளில் செஞ்சுரி அடித்தார்.

குறைந்த போட்டி

குறைந்த போட்டி

இது ஆம்லாவின் 20வது சதம் ஆகும். 108வது இன்னிங்சில் ஆம்லா தனது 20வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 20வது சதம் விளாசிய வீரர் என்ற பெருமை இதன் மூலம் ஆம்லாவுக்கு கிடைத்துள்ளது.

கோஹ்லி

கோஹ்லி

இந்திய அதிரடி வீரர் விராட் கோஹ்லி 133 இன்னிங்சுகளில் 20வது சதத்தை பூர்த்தி செய்ததுதான் இதற்கு முன்பு சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை ஆம்லா இன்று முந்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள்

மேற்கிந்திய தீவுகள்

ஹசிம் ஆம்லா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகத்தான் அதிகபட்சமாக 4 சதங்கள் விளாசியுள்ளார்.

இலங்கை

இலங்கை

இலங்கை மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக ஆம்லா தலா 3 சதங்கள் அடித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராகவும்

இந்தியாவுக்கு எதிராகவும்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தலா 2 செஞ்சுரி போட்டுள்ளார் ஆம்லா

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து..

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து..

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 1 சதங்கள் அடித்து தனது 20வது சதத்தை தொட்டுள்ளார் ஆம்லா.

கோஹ்லி இதில் டாப்

கோஹ்லி இதில் டாப்

விராட் கோஹ்லி 22 சதங்களுடன் ஆம்லாவை விட அதிக சதம் அடித்து முன்னேறிக் கொண்டுள்ளார். கோஹ்லி இலங்கைக்கு எதிராக அதிகபட்சமாக 6 சதங்கள் விளாசியுள்ளார்.

பாரபட்சமின்றி அடி

பாரபட்சமின்றி அடி

ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக தலா 3 சதங்களை பதிவு செய்துள்ளார் கோஹ்லி.

பாகிஸ்தானையும் விடவில்லை

பாகிஸ்தானையும் விடவில்லை

பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக கோஹ்லி தலா 2 செஞ்சுரி அடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவிடம் பாக்கியிருக்கு

தென் ஆப்பிரிக்காவிடம் பாக்கியிருக்கு

ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு சதம் அடித்துள்ள கோஹ்லி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்ததில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கோஹ்லியின் அதிகபட்ச ஸ்கோர் 87 (நாட் அவுட்) ஆகும்.

Story first published: Tuesday, March 3, 2015, 12:13 [IST]
Other articles published on Mar 3, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+