படு வேகமாக 6000 ரன்களைக் குவித்து கோஹ்லி சாதனையை முறியடித்த அம்லா
மும்பை: விராத் கோஹ்லி, ஹசிம் அம்லா இடையிலான சாதனை முறியடிப்பு தொடர் கதையாக நீண்டு வருகிறது. நேற்று கோஹ்லியின் சாதனையை முறியடித்தார் அம்லா.
கோஹ்லி மற்றும் தென் ஆப்பிரிக்க சூப்பர் ஸ்டார் அம்லா ஆகியோருக்கு இடையே சாதனை படைப்பதில் போட்டியே நடந்து வருகிறது. இவர் ஒரு சாதனை படைத்தால், அதை அவர் முறியடிப்பதும், அவர் படைத்தால் இவர் முந்துவதுமாக உள்ளது.
இ்நத நிலையில் நேற்று கோஹ்லியின் சாதனை ஒன்றை அம்லா முறியடித்தார். அதிவேகமாக 6000 ரன்கள் குவித்த சாதனையை கோஹ்லி வைத்திருந்தார். அதை நேற்று அம்லா முறியடித்தார்.

123வது இன்னிங்ஸில்
இந்த சாதனையை 136 இன்னிங்ஸ்களி்ல் கோஹ்லி செய்திருந்தார். ஆனால் தனது 123வது இன்னிங்ஸில் இதை சாதித்தார் அம்லா.

பவுண்டரி அடித்து
நேற்றைய போட்டியின்போது மோஹித் சர்மாவின் பந்தில் பவுண்டரி அடித்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்தார் அம்லா. நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடத் தொடங்கிய அம்லா துரதிர்ஷ்டவசமாக 23 ரன்களில் வீழ்ந்தார் என்பது நினைவிருக்கலாம்.

மோசமான ரன் வேட்டை
நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் நல்ல பார்மில் இல்லாமல் இருந்தார் அம்லா என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை போட்டிக்கு முன்பு அவர் மொத்தமாக 66 ரன்களே சேர்த்திருந்தார்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரின்போது கோஹ்லி 6000 ரன்களைக் கடந்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்னர் இப்போது அதை அம்லா முறியடித்துள்ளார்.

ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்து
141 இ்ன்னிங்ஸ்களில் 6000 ரன்களைக் குவித்திருந்த ரிச்சர்ட்ஸ்தான் அந்த சாதனைக்கு உரியவராக அத்தனை ஆண்டுகளாக இருந்து வந்தார். அவர் 1989ல் இதை செய்திருந்தார். அதை கோஹ்லி வந்து முறியடித்தார். ஆனால் தற்போது அதை ஒரே ஆண்டில் அம்லா காலி செய்து விட்ட்டார்.


Click it and Unblock the Notifications