Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட்டில்... 9000 ரன்களைக் கடந்தார் ஆம்லா

கொழும்பு : டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 9000 ரன்களை கடந்து ஆம்லா சாதனை.தென்னாபிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

முதலாவது டெஸ்டில் படுதோல்வி அடைந்த அந்த அணி தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வீரர் ஹாசிம் ஆம்லா ஒரு புதிய சாதனையை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் 9000 ரன்களை கடந்த மூன்றாவது தென்னாபிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றார்.

amla crosses 9000 runs


இதற்கு முன்னால் தென்னாபிரிக்க அணியின் ஜாக் கல்லிஸ் மற்றும் கிரீமே ஸ்மித் ஆகியோர் மட்டுமே தென்னாப்பிரிக்கா அணியின் சார்பில் டெஸ்ட் போட்டிகளில் 9000 ரன்களை கடந்தவர்கள். உலக அளவில் 9000 ரன்களுக்கு மேல் குவித்த 15ஆவது வீரர் இவர்.

ஆம்லா 119 போட்டிகளில் விளையாடி இச்சாதனையை புரிந்துள்ளார். அவர் 204 இன்னிங்சிலில் விளையாடி 9016 ரன்களை குவித்துள்ளார். இதில் 28 சதங்களும் 39 அரைசதங்களும் அடங்கும். அவரது சராசரி : 47.15 ஆகும். இவர் அதிகபட்சமாக 311* ரன்களை குவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணி சார்பில் 9000 மற்றும் அதற்கு மேல் ரன்களை குவித்த வீரர்கள்:

ஜாக் கல்லிஸ் - இவர் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13289 ரன்களை குவித்துள்ளார்.

உலகளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

கிரீம் ஸ்மித் - இவர் 117 போட்டிகளில் விளையாடி 9265 ரன்களை குவித்துள்ளார்.

உலகளவில் அதிர ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 14ஆம் இடம் பெற்றுள்ளார்.

முதலிடத்தில் யாரு?

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் , பல்வேறு சாதனைகளின் சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இவர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்களை குவித்துள்ளார். அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பெருமையும் அவருக்கே உரித்தாகும்.


Story first published: Saturday, July 21, 2018, 16:46 [IST]
Other articles published on Jul 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+