Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி நள்ளிரவில் கைது.. அள்ளிச்சென்ற காவல்துறை..! காரணம் இதுதான்

கொல்கத்தா: உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரரின் மனைவி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி. மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அவரது மனைவி ஹசின் ஜஹான்.

2018ம் ஆண்டு, சமி மீது அவரது மனைவி பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பல பெண்களுடன் சமிக்கு தொடர்பு, கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட ஏராளமான புகார்களை கூறியிருந்தார்.

அணியில் இடம்

அணியில் இடம்

பின்னர், சூதாட்டத்தில் சமி ஈடுபடவில்லை என்பதை பிசிசிஐ உறுதிசெய்து அணியில் இடம் கொடுத்தது. இந்த விவகாரத்தால் தமது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்று நினைத்திருந்த சமி, பிசிசிஐயின் நடவடிக்கையால் மகிழ்ந்தார்.

தாயாரிடம் வாக்குவாதம்

தாயாரிடம் வாக்குவாதம்

சமி மீதான வழக்கு கொல்கத்தா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந் நிலையில், நேற்று நள்ளிரவில் உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் உள்ள சமி வீட்டிற்குள் ஹசின் ஜஹான் அத்துமீறி நுழைந்துள்ளார். அத்துடன், சமியின் தாயாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

இதுகுறித்து தகவல் போலீசாருக்கு சென்றது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், ஹசின் ஜஹானை கைது செய்தனர். கைது ஆணை இல்லாமல் 24 மணி நேரம் வரை காவலில் வைத்திருக்கலாம் என்ற 151-வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

பணபலம் என புகார்

பணபலம் என புகார்

காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஹசின் ஜஹான், சமியின் பண பலத்தால் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். நள்ளிரவில் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Story first published: Monday, April 29, 2019, 14:50 [IST]
Other articles published on Apr 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+