Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாருக்கும் நோ பால்-னு தெரியுது.. ஆனா உங்களுக்கு தெரியலையா? ரொம்ப நல்ல அம்பயரா இருப்பாரோ!!

சிட்னி : ஆஸ்திரேலியாவின் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து விசித்திர சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

நேற்று முன்தினம் ஒரு வீரர் அடித்த பந்து பீல்டரின் ஹெல்மட்டில் தாக்கி, கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். புதிய விதியின் காரணமாக அது அவுட் ஆக கருதப்பட்டது.

சர்ச்சை ஆனது

சர்ச்சை ஆனது

இந்நிலையில், விக்டோரியா - குயின்ஸ்லாந்து அணிகள் இடையே ஆன போட்டியில் குயின்ஸ்லாந்து வீரர் மிட்செல் ஸ்வெப்சன் வீசிய மோசமான பந்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் வெளியாகி உள்ளது.

பிட்ச்சிற்கு வெளியே

மிட்செல் லெக் ஸ்பின்னர் ஆவார். அவர் வீசிய ஒரு பந்து பிட்ச்சிற்கு வெளியே குத்தி சென்றது. இப்படி பிட்ச்சிற்கு வெளியே குத்திச் செல்லும் பந்து நோ பால் ஆகும். ஆனால். அம்பயர் இது குறித்து எந்த எதிர்வினையும் காட்டவில்லை.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

ஒரு நோ பால் பந்தை எப்படி அம்பயர் ஒப்புக் கொண்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள். இது தொடர்பான விதிகளையும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

யாருமே பார்க்கலையா?

யாருமே பார்க்கலையா?

சரி, அம்பயர் தான் எதுவும் சொல்லவில்லை. பந்து வீசிய மிட்செல், விக்கெட் கீப்பர், எதிரணி பேட்ஸ்மேன் என அனைவரும் பந்து பிட்ச் ஆகும் இடத்தை நன்கு தெரிந்த பின்னரும் அது குறித்து கேள்வி எழுப்பவில்லை.

வர்ணனையாளர்கள் அதிருப்தி

வர்ணனையாளர்கள் அதிருப்தி

இந்த போட்டிக்கு வர்ணனை செய்து கொண்டு இருந்தவர்கள் மட்டுமே இந்த பந்துக்கு நோ பால் கொடுக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது ஏதோ பயிற்சிப் போட்டி போல நடந்து கொள்கிறார்கள் என தன் அதிருப்தியை கூறினர். அம்பயர் ரொம்ப நல்லவரா இருப்பாரோ?

Story first published: Wednesday, February 27, 2019, 15:39 [IST]
Other articles published on Feb 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+