'தளபதி' பாட்டில் மாஸ் காட்டும் 'தல'.. அல்லு சில்லு செதறுது பாருங்க

Posted By:

சென்னை: 'தளபதி' பாட்டில் 'தல' காட்சியளித்தால் எப்படி இருக்கும். புல்லரிக்கும்தானே. அதுதான் இந்த வீடியோவில் அரங்கேறியுள்ளது.

மெர்சல் திரைப்படத்தில் 'தளபதி' விஜய், பிளாஷ்பேக் அறிமுக காட்சியில், அவரது ஜோடியாக நடித்த நித்யாமேனன் ஒரு டயலாக் பேசுவார். "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அடங்காத ஒரே காளை" என்பது அந்த தெறி வசனம்.

இந்த வசனத்தை டோணி மனைவி சாக்ஷி பேச, டோணி அரங்கத்தில் அதிரடி காட்டினால் எப்படி இருக்கும். அதுதான் இந்த வீடியோவின் ஸ்பெஷல். டோணியை ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைக்கிறார்கள். எனவேதான் இது தல-தளபதி காட்சியாக பரிணமிக்கிறது.

இந்த செம எடிட்டிங் வீடியோவை பாருங்கள். சில்லரையை சிதற விட தயாராகுங்கள்.

Story first published: Wednesday, November 1, 2017, 13:41 [IST]
Other articles published on Nov 1, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற