எக்ஸ்ட்ரா ஒரு பேட்ஸ்மேன் விளையாடுனா எதுவும் மாறிடாது... பிளமிங் திட்டவட்டம்
அபுதாபி : நேற்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய கேதார் ஜாதவ் நெருக்கடியான நேரத்தில் ரன்களை அடிக்காமல் டாட் பந்துகளை அடித்துக் கொண்டிருந்தார்.
Recommended Video
இதையடுத்து அவரை அணியிலிருந்து எடுத்துவிட்டு அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அணியில் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் விளையாடுவதால் எதுவும் மாறிவிடாது என்றும் திறமையான வீரர்கள் அணியில் அதிகமாக உள்ளதாகவும் சிஎஸ்கே தலைமை கோச் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

டாட் பந்துகளை அடித்த ஜாதவ்
சிஎஸ்கே -கேகேஆர் இடையிலான நேற்றைய ஐபிஎல்லின் 21வது போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோவிற்கு முன்னதாக நெருக்கடியான நேரத்தில் இறக்கப்பட்ட கேதார் ஜாதவ் டாட் பந்துகளை அடித்துக் கொண்டிருந்தார்.

ரெய்னாவை சேர்க்க வேண்டுகோள்
முக்கிய நெருக்கடியான நேரத்தில் 12 பந்துகளுக்கு அவர் 7 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இறுதி ஓவரிலும் தூக்கி அடிக்க முயற்சிக்காமல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது போல விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகி அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு சுரேஷ் ரெய்னாவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எந்த மாற்றமும் நிகழாது
இந்நிலையில், எக்ஸ்ட்ராவாக ஒரு பேட்ஸ்மேனை கொண்டு வருவதன்மூலம் எந்த மாற்றமும் அணியில் ஏற்படாது என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அணியில் அதிகமான திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளதாகவும் பேலன்சாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஜாதவ் இறக்கப்பட காரணம்
ஜடேஜா மற்றும் பிராவோவிற்கு முன்னதாக கேதார் ஜாதவ் இறக்கப்பட்டதற்கு காரணம் அவர் ஸ்பின்னர்களை திறமையாக எதிர்கொள்வார் என்பதால்தான் என்றும் பிளமிங் மேலும் கூறினார். வாட்சன் -அம்பத்தி ராயுடு பார்ட்னர்ஷிப் தொடர்ந்திருந்தால் போட்டி திசைமாறியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கேகேஆர் பௌலர்கள் சிஎஸ்கேவிற்கு மிகுந்த நெருக்கடியை அளித்ததாகவும் அதை சமாளிக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications