For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரலாறு (நமக்கும்) முக்கியம் அமைச்சரே.. முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் "இந்தியா"வுக்கும் இடம்!

அடிலைட்: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உலகின் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பெயரும் இடம் பெற்று விட்டது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே தொடங்கியுள்ள இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய நடுவர் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையிலான இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில் தொடங்கியது.

இன்று காலை இந்த போட்டி தொடங்கியது. நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது. வரலாறு படைத்துள்ள இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, நி்யசிலாந்துடன் இந்தியாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்திய நடுவர்

இந்திய நடுவர்

இப்போட்டிக்கான கள நடுவர்களில் ஒருவர் சுந்தரம் ரவி. அவரும், இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்தும் கள நடுவர்களாக பணியாற்றுகின்றனர். இதன் மூலம் இந்தியா, இங்கிலாந்தின் பெயரும் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போட்டியில் இடம் பெற்று விட்டது.

ஜூன் முதல்

ஜூன் முதல்

சுந்தரம் ரவி கடந்த ஜூன் மாதம் ஐசிசியின் எலைட் நடுவர்கள் குழுவில் இணைந்தார். இது அவருக்கு 10வது டெஸ்ட் போட்டியாகும். 2013ம் ஆண்டு முதல் இவர் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

25 ஒரு நாள் போட்டிகளில்

25 ஒரு நாள் போட்டிகளில்

சுந்தரம் ரவி 25 ஒரு நாள் போட்டிகளிலும், 12 டுவென்டி 20 போட்டிகளிலும் நடுவராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளரவமாக உணர்கிறேன்

கெளரவமாக உணர்கிறேன்

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகல் இரவுப் போட்டியில் நடுவராகப் பணியாற்றுவது குறித்து சுந்தரம் ரவி கூறுகையில், மிகவும் கெளரவமாக உணர்கிறேன். இதற்கு வாய்ப்பை ஏற்படுத்திய பிசிசிஐக்கு நன்றி் என்றார்.

இவங்களும்தான்

இவங்களும்தான்

இவர்கள் தவிர இங்கிலாந்து நடுவர் நிகல் லாங் 3வது அம்பயராக உள்ளார். ஆஸ்திரேலியாவின் சிமோன் பிரை ரிசர்வ் நடுவராக உள்ளார். இலங்கையின் ரோஷன் மகானமா போட்டி நடுவராக உள்ளார். இவர்களுக்கும் வரலாற்றில் இடம் கிடைத்துள்ளது.

138 வருஷமா

138 வருஷமா

கடந்த 138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது என்பது முக்கியமானது. இளஞ்சிவப்பு நிற பந்து இந்தப் போட்டிக்காக பயன்படுத்தப்படுகிறது.

Story first published: Friday, November 27, 2015, 12:25 [IST]
Other articles published on Nov 27, 2015
English summary
Indian umpire Sundaram Ravi is participating in the historic firstever day-night Test at Adelaide Oval being held between Australia and New Zealand.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+