For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்- இந்திய அணியின் தேர்வு எப்படி? பலம், பலவீனம் என்ன?

மும்பை: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டி கொண்ட தொடர் வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியை காணொலி காட்சி மூலம் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தேர்வு செய்தார்.

இதில் கே.எல்.ராகுல் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அணியின் பலம், பலவீனம் குறித்து பார்க்கலாம்.

பலமான அணி

பலமான அணி

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இந்த தொடருக்கு ஒரு பலமான அணியை தான் அனுப்ப உள்ளது. இதனால் பிசிசிஐயும் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கவில்லை. மற்ற சீனியர்களான ரோகித், கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் இல்லை என்றாலும், திறமையான வீரர்கள் நிறைய பேர் அணியில் உள்ளனர். இதனால் சீனியர்கள் இல்லாதது ஒரு குறையாக இருக்காது.

பேட்டிங்கில் யார்?

பேட்டிங்கில் யார்?

இதே போன்று 3 ஆண்டுகளுக்கு பிறகு தினேஷ் கார்த்திக்கிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் அணியில் இருப்பதால் கார்த்திக் ஒரு சாதாரண வீரராக தான் அணியில் இருப்பார் என தெரிகிறது. இதை தவிர இஷான் கிஷன் வேறு அணியில் இருக்கிறார். தொடக்க வீரர்களாக ருத்துராஜ், ராகுல் செயல்படுவார்கள். இதில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் இஷான் விளையாடும் வகையில் அணி தேர்வு நடந்துள்ளது.

நடுவரிசை எப்படி?

நடுவரிசை எப்படி?

நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் களமிறங்கும் வகையில் அணி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் சஞ்சு சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தால், அவரை நடுவரிசையில் வைத்து பரிசோதனை முயற்சி எடுத்திருக்கலாம். அந்த வகையில் அணித் தேர்வில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது. இருப்பினும் விராட் வந்துவிட்டால் நடுவரிசையும் பலமாகிவிடும்.

10 பந்துவீச்சாளர்கள் ஏன்?

10 பந்துவீச்சாளர்கள் ஏன்?

ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு வழங்கியது பாராட்டத்தக்க வேண்டியது. அதே போல் ஜடேஜா இல்லாததால் அக்சர் பட்டேலுக்கு தேர்வுக்குழு வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். வெங்கடேஷ் ஐயர் நடப்பு சீசனில் சொதப்பினாலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சுழற்பந்துவீச்சில் சால்,குல்தீப், ரவி புஸ்னாய், அக்சர் பட்டேல் என 4 வீரர்கள் உள்ளனர். இதே போன்று வேகப்பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், ஹர்சல் பட்டேல், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், ஆர்ஷ்தீப் என 5 பேர் உள்ளனர்.

அணி விவரம்

அணி விவரம்

மொத்தம் பந்துவீச்சுக்கு என 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் யாராவது ஒருவரை நீக்கிவிட்டு பேட்ஸ்மேன் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம். மொத்தத்தில் சிறப்பான அணியை தான் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். கேஎல் ராகுல் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), ருத்துராஜ் , இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் , தினேஷ் கார்த்திக், ஹர்திக் வெங்கடேஷ் , சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னாய், அக்சர் பட்டேல், புவனேஸ்வர், ஹர்சல் பட்டேல், அவேஷ் கான், ஆர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக்

Story first published: Sunday, May 22, 2022, 19:44 [IST]
Other articles published on May 22, 2022
English summary
Analysis of Indian squad vs SA t20 Series – Positives தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்- இந்திய அணியின் தேர்வு எப்படி? பலம், பலவீனம் என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+