For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகமே திரும்பி பார்த்த அம்பானி வீட்டு திருமணம்.. இந்திய கலாச்சாரத்தை பெருமைப்படுத்திய நிகழ்வு

மும்பை: உலகின் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் ஒரே இடத்தில் கூடி கொண்டாடினால், அது எப்படி இருக்கும். அது தான் மும்பையில் நிகழ்ந்த அனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமணம். கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற அந்த மாபெரும் திருமண விழாவின் நினைவுகள் இன்னும் கோடிக்கணக்கானோரின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன.இதற்கு காரணம், வெறும் நட்சத்திர பட்டியல் அல்ல, இந்தியாவின் கலாச்சாத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்ததற்காக.

இந்த ஆறு நாள் கொண்டாட்டம், அதன் மாபெரும் அளவிற்காக மட்டுமல்ல, இந்தியாவின் பாரம்பரியங்களையும், ஆழமான கலாச்சார மதிப்புகளையும் உலக அரங்கில் பறைசாற்றியதற்காகவும் நினைவுகூரப்படுகிறது. இது ஒரு திருமணம் மட்டுமல்ல, இந்தியாவின் பாரம்பரிய மதிப்புகளை அன்புடன் ஏற்றுக்கொண்ட இரு நவீன குடும்பங்களின் கலாச்சார பெருமையை வெளிப்படுத்திய ஒரு மாபெரும் காட்சியாகும்.

Ananat Ambani and Radhika Merchant Wedding

ஒரு வருடம் கடந்த பிறகும், அம்பானி-மெர்ச்சன்ட் திருமணம், இந்திய பாரம்பரியங்கள், மதிப்புகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில், உண்மையான அர்ப்பணிப்புடன் வெளிப்படுத்தப்பட்டது. இந்தியாவுன் கலாச்சாரமும், பாரம்பரியமும் உலகை வசீகரிக்கும் என்பதற்கு ஒரு பிரகாசமான உதாரணமாக விளங்குகிறது.

ஒவ்வொரு நிகழ்வின் ஆன்மீகப் புனிதத்தன்மை, வேத சடங்குகளுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை மற்றும் கவனமாகத் திட்டமிடப்பட்ட விழாக்கள் ஒரு ஆழமான செய்தியை வெளிப்படுத்தின. இந்தியாவின் அடையாளம் அதன் பாரம்பரியங்களில் உள்ளது. அந்த அடையாளத்தை உலகின் மிகப் பெரிய மேடைகளில் கொண்டாடுவது மதிப்பு வாய்ந்தது.

மும்பையின் BKC-யில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்தத் திருமணம், ஜூன் 29, 2024 அன்று ஆன்ட்டிலியாவில் நடைபெற்ற கணேஷ் பூஜையுடன் தொடங்கியது. இது பக்தியையும், பணிவையும் அடிப்படையாகக் கொண்டு விழாவின் தொனியை அமைத்தது. அதைத் தொடர்ந்து, ஹல்தி, மெஹந்தி, சங்கீத் மற்றும் கர்பா இரவு போன்ற பாரம்பரிய இந்திய விழாக்கள், கலாச்சார செழுமையுடன் நடைபெற்றன.

ஜூலை 12 அன்று நடைபெற்ற திருமண நாள், வேத மந்திரங்கள், புனிதமான அக்னி சடங்குகள் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளால் இந்திய திருமண விழாக்களின் காலமற்ற நளினத்தை வெளிப்படுத்தியது. நிகழ்ச்சிகளின் அலங்காரமும், அமைப்பும் கோயில் கட்டிடக்கலை, நாட்டுப்புற வடிவமைப்புகள் மற்றும் புராண சின்னங்களால் ஈர்க்கப்பட்டவையாக இருந்தன.

ஒவ்வொரு மலர் இதழும், தீபமும், மந்திரமும் இந்த விழாவை ஒரு ஆன்மீக அனுபவமாக மாற்றியது. தம்பதியரின் உடைகள் இந்திய கைவினைத்திறனின் உருவகமாக விளங்கின. திருமண நாளில், ராதிகாவின் சிவப்பு-வெள்ளை அபு ஜானி சந்தீப் கோஸ்லா மணப்பெண் லெஹங்காவும், அனந்தின் கைத்திறன் வேலைப்பாடுகளுடன் கூடிய சப்யாசாச்சி ஷெர்வானியும், வெறும் ஆடைகளாக மட்டுமல்ல, இந்திய கலாச்சார அஞ்சலிகளாகவும் இருந்தன.

ஜர்தோசி, மிரர்வொர்க் மற்றும் பாரம்பரிய இந்திய வடிவமைப்புகளின் பயன்பாடு, இந்தியாவின் செழுமையான ஜவுளி மற்றும் வடிவமைப்பு பாரம்பரியத்தை உலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்களும், திறமையான கைவினைஞர்களும் ஆடைகள் மற்றும் நகைகளுக்கு பங்களித்தனர்.இந்த திருமணத்தை இந்தியாவின் அடித்தள கலைப் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றச் செய்தனர்.

அலங்காரம், உணவு, ஆடை, சடங்குகள் என அனைத்திலும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அம்பானி மற்றும் மெர்ச்சன்ட் குடும்பங்கள் தங்கள் வேர்களை மதிக்கும் உண்மையான முயற்சியை பிரதிபலித்தது. இந்த திருமணத்தை உலகம் வெறுமனே பார்க்கவில்லை. அது அதைப் பாராட்டியது.

அம்பானி-மெர்ச்சன்ட் திருமணம் உலகளவில் பரபரப்பான தலைப்பாக மாறியது. CNN, BBC, Vogue, The New York Times போன்ற முக்கிய சர்வதேச ஊடகங்கள் இந்த விழாக்களை அதன் ஆடம்பரத்திற்காக அல்ல, அதன் கலாச்சார ஆழத்திற்காக பதிவு செய்தன. புனிதமான சடங்குகள், பக்தி இசை மற்றும் குடும்ப ஆசீர்வாதங்களின் காட்சிகள், இந்திய திருமண பாரம்பரியங்களை உலகிற்கு ஒரு அரிய, உண்மையான பார்வையாக வழங்கின.உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு, இந்த திருமணம் ஒரு பெருமைமிக்க தருணமாக இருந்தது.

இது செல்வத்தைப் பற்றியதல்ல, மதிப்புகளைப் பற்றியது. உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க வணிகக் குடும்பங்களில் ஒன்று, தங்கள் நம்பிக்கை, சடங்குகள் மற்றும் பாரம்பரியத்தின் ஒவ்வொரு விவரத்தையும் உலகளாவிய மேடையில் கொண்டாடியது ஒரு கலாச்சார மைல்கல்லாகும். உலகெங்கிலும் உள்ள மேன்மக்கள், பிரபலங்களின் கொண்டாட்டங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், அனந்த் மற்றும் ராதிகாவின் திருமணம் இந்திய கலாவ்சசாரத்தை சார்ந்து இருந்தது.

அவர்களின் ஒற்றுமை, நவீனத்துவமும் பாரம்பரியமும் அழகாக இணைந்து வாழ முடியும் என்பதையும், உண்மையான அன்பின் வெளிப்பாடாக விளங்குகிறது. இதே போல், நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதை மதிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தியது. ஒவ்வொரு சடங்குகள் மூலமாக, இந்தத் தம்பதியரும் அவர்களது குடும்பங்களும் இந்திய குடும்ப மதிப்புகளின் வலிமையை வெளிப்படுத்தின.

ஒரு வருடம் கடந்த பிறகும், இந்த திருமணத்தின் மரபு, இளம் இந்தியர்களை தங்கள் வேர்களைப் பெருமையுடனும், மரியாதையுடனும் கொண்டாட ஊக்குவிக்கிறது. அனந்த் மற்றும் ராதிகாவின் திருமணம் ஒரு ஒற்றுமை மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார மைல்கல்லாகும். இந்திய மதிப்புகள், முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்படும்போது, அவை கடந்த காலத்திற்கு மட்டுமல்ல, உலகளாவிய மேடைக்கு உரியவை என்று அது கூறியது.

இந்தத் தம்பதியரின் திருமணம், நவீனமடைந்த உலகில் பெருமையுடன் இந்தியராக இருப்பதன் அர்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு ஒளி விளக்காக உள்ளது. இந்த பெருமை, எந்த ஆடம்பரமோ அல்லது விருந்தினர் பட்டியலோ இல்லாமல், வரும் தலைமுறைகளால் நினைவுகூரப்படும்.

Story first published: Saturday, July 12, 2025, 12:21 [IST]
Other articles published on Jul 12, 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+