Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 தொடரை ஜெயிச்சதுக்கா இப்படி.... சின்னப்புள்ளத்தனமாக செய்த பிரபல தொழிலதிபர்.. குழம்பிய ரசிகர்கள்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றுள்ளதால், தான் உறுதியளித்தபடி ஒரு விஷயத்தை செய்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3 - 2 என்ற கணக்கில் வென்றது.

இந்நிலையில் அது குறித்து ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் செய்துள்ள விஷயங்கள், அவருக்கு என்ன ஆனது என யோசிக்கவைக்கும் அளவிற்கு சென்றுள்ளது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் நேற்று இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 -2 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது.

கவர்ந்த அக்‌ஷர்

கவர்ந்த அக்‌ஷர்

இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான அக்சர் படேல், 3 போட்டிகளில் ஆடி, 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரை பாராட்டு விதமாக, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ட்விட்டரில் அக்‌ஷர் பட்டேல் கண்ணாடி அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, இந்தியாவின் இந்த வெற்றியை நினைவு கூறும் விதமாக, இந்த சன் கிளாஸை நான் பெற விரும்புகிறேன். அவை என்ன பிராண்ட். நான் எங்கே வாங்க முடியும்?' என பதிவிட்டிருந்தார்.

வாங்கப்பட்ட கண்ணாடி

வாங்கப்பட்ட கண்ணாடி

இதனைத் தொடர்ந்து, 2வது டி 20 போட்டிக்கு முன்னதாக ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா, 'இந்தியாவின் வெற்றியை நினைவு கூறும் விதமாக, அக்சரின் சன் கிளாஸ்களை நான் பெறப் போவதாக அறிவித்திருந்தேன். அதே போல, தற்போது ஒரு ஜோடி கண்ணாடியை நான் வாங்கியுள்ளேன். இன்றைய போட்டியைக் காண அனைவரும் ஆவலாக உள்ளனர். டிவி பார்க்க எந்த சன் கிளாஸ்களும் தேவையில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனது மனைவி கூட இவருக்கு என்ன ஆகி விட்டது என நினைக்கத் தோன்றும். ஆனாலும், இது நல்ல அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கலாம்!'

கோரிக்கை

கோரிக்கை

அவரின் இந்த பதிவுக்கு ரிப்பளை செய்திருந்த ஒருவர், சன் கிளாஸ் போட்டு கிரிக்கெட் பார்க்கும் புகைப்படத்தை பதிவிடுமாறு கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, 'இந்தியா தொடரை கைப்பற்றியதும் புகைப்படத்தை பதிவிடுகிறேன். இந்த சன் கிளாஸ், ஒரு போட்டிக்கான அதிர்ஷ்டமாக மட்டும் அமையாமல், இந்த தொடர் முழுவதும் இந்திய அணிக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் என தெரிவித்திருந்தார்.

சொன்னதை செய்த மஹிந்திரா

சொன்னதை செய்த மஹிந்திரா

இந்நிலையில் நேற்று இந்திய அணி டி20 தொடரை வென்றதால், தான் கூறியதை போல அக்‌ஷர் பட்டேல் அணிந்திருந்த சன் கிளாஸை போலவே ஒரு கண்ணாடியை அணிந்து அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், நான் கூறியபடி அதிர்ஷடம் நடந்துவிட்டது என தெரிவித்துள்ளார். இதனையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு பெரிய தொழிலதிபருக்கு என்னதான் ஆச்சு என குழம்பி வருகின்றனர். இதே போல ஒரு நாள் போட்டியிலும் ஆனந்த் மஹிந்திராவின் குறும்பு தனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, March 21, 2021, 18:55 [IST]
Other articles published on Mar 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+