Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தனியாளாக போராடிய தமிழர்.. போட்டிக்கு நடுவே சுந்தருக்கு கோலி அனுப்பிய "ஸ்பெஷல் மெசேஜ்".. நங்கூரம்!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் வாஷிங்க்டன் சுந்தர் இன்று மிகவும் சிறப்பாக ஆடினார். தனியாளாக இந்திய அணியை சரிவில் இருந்து வாஷிங்க்டன் சுந்தர் காப்பாற்றினார்.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்துள்ளது. அதன்பின் பேட்டிங் இறங்கிய இந்திய அணி வீரர்கள் மோசமாக திணறினார்கள்.

இந்திய அணி 337 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆகி உள்ளது. இந்திய அணி இங்கிலாந்தை விட 241 ரன்கள் பின் தங்கி உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு இங்கிலாந்து பாலோ ஆன் கொடுக்கவில்லை.

பேட்டிங்

பேட்டிங்

தற்போது பேட்டிங் இறங்கி இரண்டாவது இன்னிங்சில் ஆடி வரும் இங்கிலாந்து தொடக்கத்திலேயே பர்ன்ஸ் விக்கெட்டை இழந்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் கடைசி ஒன்றரை நாட்களில் என்ன விதமான மாற்றம் வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது.

மாற்றம்

மாற்றம்

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் வாஷிங்க்டன் சுந்தர் இன்று மிகவும் சிறப்பாக ஆடினார். தனியாளாக இந்திய அணியை சரிவில் இருந்து வாஷிங்க்டன் சுந்தர் காப்பாற்றினார். நேற்று மதியத்திற்கு பின் பேட்டிங் இறங்கிய சுந்தர் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார்.

ஆதிக்கம் செலுத்தினார்

ஆதிக்கம் செலுத்தினார்

அதன்பின் இன்று களமிறங்கிய சுந்தர் சிறப்பான ஷாட் தேர்வுகள் மூலம் நம்பிக்கை அளித்தார். அசால்ட் சிக்ஸ், எதிர்பாராத பவுண்டரிகள், முறையான பிளான் என்று சுந்தர் பெரிய அளவில் நம்பிக்கை அளித்தார். கோலியே எழுந்து நிற்கும் அளவிற்கு வாஷிங்க்டன் சுந்தர் அதிரடியாக ஆடினார்.

அஸ்வின் அவுட்

அஸ்வின் அவுட்

இந்த போட்டியில் அஸ்வின் அவுட் ஆன பின் சுந்தர் மட்டும் தனியாக போராடினார். இங்கிலாந்து அணி பாலோ ஆன் கொடுக்க கூடாது என்பதால் சுந்தர் 379 ரன்களை இந்தியா எடுக்க வேண்டும் என்று குறி வைத்து ஆடினார். அப்போதுதான் கோலி சுந்தருக்கு முக்கிய மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

மெசேஜ் அனுப்பினார்

மெசேஜ் அனுப்பினார்

அதில், சுந்தரிடம் அதிரடியாக சிக்ஸ், பவுண்டரி அடிக்கும்படி கூறியுள்ளார். 379 எடுக்க முடியாது என்றாலும், ரன் வேறுபாட்டை குறைக்க வேண்டும். மற்ற பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் அவுட்டாக வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் அதிரடியாக ஆடுங்கள். முடிந்த அளவு ரன்னை அதிகப்படுத்துங்கள் என்று சுந்தருக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.

சுந்தர்

சுந்தர்

இதனால் சுந்தரும் அதிரடியாக பவுண்டரி அடித்து வேகம் எடுத்தார். நங்கூரம் போல நின்ற சுந்தர் புயல் காற்று போல வேகம் காட்ட தொடங்கினார். அதிரடியாக சுந்தர் 85 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா இன்னொரு பக்கம் அவுட் ஆனார். ஆனால் அதற்குள் சுந்தர் இந்தியா - இங்கிலாந்து இடையிலான வேறுபாட்டை 241 ரன்கள் என்று குறைத்துவிட்டார்.

பேட்டிங்

பேட்டிங்

இதனால் இந்திய அணியை பாலோ ஆன் செய்ய இங்கிலாந்து அழைக்கவில்லை. பாலோ ஆன் செய்ய கூப்பிட்டால் இங்கிலாந்து அணி தோல்வி அடைய வாய்ப்புள்ளது . இதனால் இங்கிலாந்து அணி மீண்டும் பேட்டிங் இறங்க முடிவு செய்துள்ளது.

Story first published: Monday, February 8, 2021, 12:22 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+