ஜடேஜாவை திட்டி, தள்ளிவிட்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆண்டர்சன்: ஐசிசியில் இந்திய அணி புகார்
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை உசுப்பேற்றும் வகையில் திட்டியதாகவும், பிடித்து தள்ளியதாகவும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் மீது ஐசிசியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வியப்பு தெரிவித்துள்ளது. இந்த புகார் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் டெஸ்ட் தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்று பயணம்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. அடுத்த டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

தள்ளி விட்ட பவுலர்
முதல் போட்டியின் 2வது நாளின் உணவு இடைவேளையின் போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா மற்றும் பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஆகியோர் மைதானத்தை விட்டு ஒன்றாக பெவிலியனை நோக்கி நடந்து சென்றனர். அப்போது ஜடேஜாவை, ஆண்டர்சன் திட்டியதாகவும் பிடித்து தள்ளி விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

ஐசிசியிடம் புகார்
இந்திய அணி மேலேஜர் சுனில் தேவ் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஐசிசி பத்திரிகை அறிக்கை மூலமாக உறுதி செய்துள்ளது.

தடை விதிக்க வழியுள்ளது
ஐசிசி சட்டத்தின் 2.3.3 பிரிவின்கீழ் வரும் இந்த விதிமீறலுக்காக ஆண்டர்சனுக்கு இரு டெஸ்ட் அல்லது நான்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க முடியும்.

ஆச்சரியம்
இதனிடையே இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இநத் புகார் குறித்து ஆச்சரியம் வெளியிட்டுல்ளது. ஆண்டர்சனை இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கியுள்ளது வியப்பளிக்கிறது. இது ஒரு சாதாரண விஷயமாகும். இதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏன் பெரிதுபடுத்தியது என்று புரியவில்லை என்று கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications