For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லார்ட்ஸில் மட்டும் 100 விக்கெட்…. விரைவில் மெக்கிராத்தையும் மிஞ்சுவார் ஆண்டர்சன்

By Aravinthan R

லண்டன் : லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் தாய் வீடு என கருதப்படுகிறது. அந்த மைதானத்தில் கிரிக்கெட்டின் ஆரம்ப காலம் தொட்டே போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த மைதானத்தில் மட்டும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் 103 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஒரே மைதானத்தில் அதிக விக்கெட்கள் என்ற சாதனை நாம் அதிகம் கேள்விப்படாத ஒன்று என்றாலும், இலங்கையின் முத்தையா முரளிதரன் மூன்று மைதானங்களில் நூறுக்கும் அதிகமான விக்கெட்கள் வீழ்த்தி இந்த பட்டியலின் முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளார். அவர் கொழும்புவில் உள்ள சின்ஹலீஸ் மைதானத்தில் 166, கண்டி மைதானத்தில் 117 மற்றும் காலே மைதானத்தில் 111 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.

anderson becomes a first bowler to take 100 wickets at lords

இந்த சாதனைப் பட்டியலில் அதே இலங்கையின் ரங்கனா ஹெராத்தை முந்தி, ஆண்டர்சன் தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளார். ஆண்டர்சன் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி வரை லார்ட்ஸ் மைதானத்தில் 103 விக்கெட்கள் வீழ்த்தியிருக்கிறார். ஆண்டர்சன் இன்னும் சில காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் பட்சத்தில் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் வரை பிடிக்க வாய்ப்புள்ளது.

முரளிதரன், ஹெராத் என இலங்கை வீரர்கள் ஒரே மைதானத்தில் அதிக விக்கெட்கள் எடுத்த பட்டியலில் முன்னிலையில் இருக்க முக்கிய காரணம், இலங்கையில் இருக்கும் குறைந்த அளவிலான கிரிக்கெட் மைதானங்களே ஆகும். இந்திய வீரர்களில் அனில் கும்ப்ளே டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 58 விக்கெட்கள் வீழ்த்தியதே இந்த பட்டியலில் இந்தியர்கள் சார்பான அதிக பட்சமாகும்.

இந்த பட்டியல் மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன், ஆஸ்திரேலியாவின் மெக்கிராத்தை நெருங்கி இருக்கிறார். இன்னும் 11 விக்கெட்கள் வீழ்த்தும் பட்சத்தில், மெக்கிராத்தை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காம் இடம் பிடிப்பார் ஆண்டர்சன். அதே போல, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தையும் பிடிப்பார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே மற்றும் அனில் கும்ப்ளே இருக்கின்றனர்.

Story first published: Monday, August 13, 2018, 18:15 [IST]
Other articles published on Aug 13, 2018
English summary
Anderson becomes a first bowler to take 100 wickets at Lords.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X