Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு சோதனை..ஆண்டர்சனுக்கு சாதனை..முரளிதரனை முந்தினார்

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரனின் சாதனையை வீழ்த்தி ஆண்டர்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தில், இந்திய அணிக்கு சோதனையாக இருக்கும் விஷயங்களில் ஆண்டர்சனின் பந்துவீச்சும் ஒன்று.

anderson new record against india leading wicket taker


தற்போது ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் பௌலராக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகபந்துவீச்சாளர்கள் வரிசையில் மெக்ராத்துக்கு அடுத்த இடத்தில் இருப்பதும் இவரே.

இதுவரை ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக 107* விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக முரளிதரனின் 105 விக்கெட்களே சாதனையாகும்.

இந்திய அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் விவரம் :

1. ஜேம்ஸ் ஆண்டர்சன் - 107* விக்கெட்கள்

2. முரளிதரன் - 105 விக்கெட்கள்

3. இம்ரான் கான் - 94 விக்கெட்கள்

4. மால்கம் மார்ஷல் - 76 விக்கெட்கள்

5. ஸ்டுவர்ட் பிராட் - 69 விக்கெட்கள்

6. ஆண்டி ராபர்ட்ஸ் - 67 விக்கெட்கள்




Story first published: Sunday, September 9, 2018, 10:21 [IST]
Other articles published on Sep 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+