For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மின்னல் வேக பவுன்சர்.. பலத்த அடி.. கீழே சரிந்த ரஸ்ஸல்.. அதன் பின்.. பதற வைத்த காட்சிகள்!

Recommended Video

Andre Russell injured with bouncer | மின்னல் வேக பவுன்சர்! கீழே சரிந்த ரஸ்ஸல்

ஜமைக்கா : கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஹெல்மட்டின் தலைப் பகுதியில் பலத்த அடி வாங்கி, கீழே விழுந்தார். அதன் பின் நடந்த அந்த காட்சிகள் ரசிகர்களை பதற வைத்தது.

வெஸ்ட் இண்டீஸ்-இல் நடந்து வரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் ஜமைக்கா தல்லாவாஹ்ஸ் - செயின்ட் லூசியா சூக்ஸ் இடையே ஆன போட்டி நடைபெற்றது.

செயின்ட் லூசியா அணியின் வேகப் பந்துவீச்சாளர் வீசிய அதிவேக பவுன்சர், ஆண்ட்ரே ரஸ்ஸல் தலையில் பலமாக தாக்கியது. அதில் அவர் நிலை குலைந்தார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல் பேட்டிங்

ஆண்ட்ரே ரஸ்ஸல் பேட்டிங்

இந்த சம்பவம் அந்த டி20 போட்டியின் 14வது ஓவரில் நடந்தது. ஆண்ட்ரே ரஸ்ஸல் அப்போது தான் பேட்டிங் செய்ய வந்து இருந்தார். இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்து ஆடி வந்தார்.

அந்த பந்து

அந்த பந்து

அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை வேகப் பந்துவீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோன் ஷார்ட் பந்தாக வீசினார். அதை சரியாக கணிக்காத ஆண்ட்ரே ரஸ்ஸல்-இன், ஹெல்மட்டில் பலத்த வேகத்தில் தாக்கியது பந்து.

விழுந்து புரண்டார்

பந்து அடித்த அதே வேகத்தில் கீழே விழுந்து புரண்டார் ரஸ்ஸல். அப்போதே பெரும் பதற்றம் ஏற்பட்டது. பந்து அவரின் வலது பக்க காதுக்கு அருகே தாக்கி இருக்கலாம் என ரீப்ளேவில் தெரிந்தது.

நெக் கார்டு இல்லை

நெக் கார்டு இல்லை

ஆண்ட்ரே ரஸ்ஸல் கழுத்துப் பகுதியை பாதுகாக்கும் "நெக் கார்டு" அணியவில்லை என்பதால், தலை முதல் கழுத்து வரை உள்ள பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது. பந்து தாக்கி கீழே விழுந்த பின் ரஸ்ஸல் எழுந்து நிற்க முயன்றார்.

பதறினர்

பதறினர்

எனினும், மீண்டும் கீழே விழுந்தார். அதைக் கண்ட அனைவரும் பதறினர். செயின்ட் லூசியா சூக்ஸ் அணியின் பீல்டர்கள் விரைந்து அவர் ஹெல்மட்டை கழற்றினர். பின் பிசியோதெரபிஸ்ட் விரைந்து வந்து முதலுதவி செய்ய முயன்றார்.

மருத்துவமனைக்கு விரைந்தார்

மருத்துவமனைக்கு விரைந்தார்

பின், ரஸ்ஸல்-ஐ தூக்கிச் செல்ல ஸ்ட்ரெட்சர் எடுத்துக் கொண்டு வந்தனர். பின்னர் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் ரஸ்ஸல். ஸ்கேன் முடிவுகளின் படி எந்த சிக்கலும் இல்லை என்ற தகவல் வந்த பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

இரண்டு நாட்கள் ஓய்வு

எனினும், ரஸ்ஸல் மருத்துவர்களின் அறிவுரைப்படி இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுதப்பட்டுள்ளார். ரஸ்ஸல் பாதியில் வெளியேறிய நிலையில், அவரின் ஜமைக்கா அணியும் போட்டியில் தோல்வி அடைந்தது.

ஸ்டீவ் ஸ்மித் சம்பவம்

ஸ்டீவ் ஸ்மித் சம்பவம்

சமீபத்தில் ஸ்டீவ் ஸ்மித் இதே போல ஹெல்மட்டில் பந்து தாக்கி காயமடைந்து, ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பாதியிலேயே வெளியேறி, பின் சில வாரம் ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவம் நடந்த அடுத்த சில வாரங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Story first published: Friday, September 13, 2019, 17:28 [IST]
Other articles published on Sep 13, 2019
English summary
Andre Russell hit on head severely with bouncer during CPL match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+