Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா? கிரிக்கெட் வீரர் செய்த காரியம்.. கோபத்தில் விளாசிய ரசிகர்கள்!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிபிஎல் கிரிக்கெட் தொடரில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிபிஎல் கிரிக்கெட் தொடர் உலகம் முழுக்க பிரபலம். ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான கிரிக்கெட் தொடராக பிபிஎல் கிரிக்கெட் தொடர் பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே இடைவெளி விட்டு, இந்த தொடர் நடந்து வருகிறது. வித்தியாசமான விதிகள் காரணமாக இதில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடக்கும்.

சுவாரசியம்

சுவாரசியம்

இந்த நிலையில் பிபிஎல் கிரிக்கெட் தொடரில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிட்னி அணிக்கும் பெர்த் அணிக்கும் இடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் முதலில் ஆடிய பெர்த் அணி 168 ரன்கள் எடுத்தது.

சிட்னி

சிட்னி

அதன்பின் களமிறங்கிய சிட்னி அணி அதிரடியாக ஆடி வெற்றி இலக்கை 17வது ஓவரிலேயே நெறுங்கியது. சிட்னி அணியின் ஜேம்ஸ் வின்ஸ் 99 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதேபோல் டேனியல் ஹுக்ஸ் 3 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வந்தார். ஒரு ரன் எடுத்தால் சிட்னி அணி வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது.

 பேட்டிங்

பேட்டிங்

இதில் ஜேம்ஸ் வின்ஸ் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்பதற்காக டேனியல் போட்டியை முடிக்காமல்,டொக் வைத்துக் கொண்டு இருந்தார். வரிசையாக 3 பந்துகளை டொக் வைத்து அந்த ஓவரை டேனியல் முடித்தார். இதனால் அடுத்த ஓவரில் ஜேம்ஸ் வின்ஸ் ஸ்டிரைக் எடுத்தார்.

ஆனால்

ஆனால்

அடுத்த ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் எடுத்து செஞ்சுரி எடுக்கலாம், அதேபோல் அணியையும் வெற்றிபெற வைக்கலாம் என்று ஜேம்ஸ் வின்ஸ் நினைத்தார். ஆனால் பெர்த் அணி சார்பாக பவுலிங் செய்த ஆண்ட்ரு டை வேன்றுமென்றே வைட் பந்தை வீசினார். ஜேம்ஸ் வின்ஸ் செஞ்சுரி எடுக்க கூடாது என்று இப்படி வைட் வீசினார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனால் ஜேம்ஸ் வின்ஸ் செஞ்சுரி எடுக்காமலே சிட்னி அணி வெற்றிபெற்றது. பெர்த் அணியின் வீரர் ஆண்ட்ரு டை செய்த இந்த காரியம் பெரிய அளவில் சர்ச்சையானது. எப்படி இருந்தாலும் தோல்வி அடைய போகிறீர்கள். அப்படி இருக்கும் போது ஜேம்ஸ் வின்ஸ் செஞ்சுரி அடித்தால் என்ன..ஏன் இப்படி வைட் வீசினீர்கள் என்று பலரும் கேட்டுள்ளனர்.

சர்ச்சை கேள்வி

அதிலும் ஆண்ட்ரு டைக்கு எதிராக பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். டை இப்படி செய்து இருக்க கூடாது. இதைவிட கேவலமான விஷயம் வேறு இருக்க முடியாது, என்று அவருக்கு எதிராக பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

Story first published: Sunday, January 31, 2021, 9:55 [IST]
Other articles published on Jan 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+