ஆண்டிரு சைமண்ட்ஸ் பற்றி தெரியாத 10 விஷயங்கள்.. மங்கி கேட் முதல் மதுவுக்கு அடிமையானது வரை
குயின்ஸ்லாந்து: பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Recommended Video
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தாம் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் மிகவும் அதிரடியாக ஆடக் கூடியவர். 2003ஆம் ஆண்டு உலககோப்பை அரையிறுதி ஆட்டத்தில் சைமண்ட்ஸ் அடித்த சதத்தால் தான் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இல்லையேன்றால் 2003ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் தான் மோதியிருக்கும்.

இங்கிலாந்தில் பிறந்தவர்
ஆண்டிரு சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் அல்ல, இங்கிலாந்தில் பிர்மாங்காமில் பிறந்தவர். அவரை ஆஸ்திரேலிய தம்பதிகள் தத்தெடுத்து சிறு வயதில் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றனர். அது தான் அவரது வாழ்க்கையை மாற்றியது. சைமண்ட்சின் பெற்றோரில் ஒருவர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். சைமண்ட்ஸ், ஆஸ்திரேலியாவில் ஜூனியர் கிரிக்கெட்டில் விளையாடும் போது, அவரை இங்கிலாந்துக்கு வந்து விளையாட ECB அழைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் நிராகரித்தார்.

பாலிவுட்
சைமண்ட்சின் அடையாளமே அவரது ஹேர்ஸ்டைல் தான். ஆனால் கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக தனது தலைமுடியை சைமண்ட்ஸ் மொட்டை அடித்து கொண்டார். 2011ஆம் ஆண்டு இந்தியாவில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சன்னி லியோனுடன் சைமண்ட்ஸ் கலந்து கொண்டார். 2011ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான பாட்டியா ஹவுஸ் படத்தில் சைமண்ட்ஸ் அக்சய் குமாருடன் இணைந்து நடித்தார்.

அதிக சம்பளம்
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆண்டிரு சைமண்ட்ஸ் விளையாடினார். அப்போது அதிக சம்பளம் பெற்ற வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை சைமண்ட்ஸ் பெற்றார். சைமண்ட்ஸ்க்கு ரக்பி விளையாட வேண்டும் என்று மிகவும் ஆசை. இதற்காக பயிற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றதால் அந்த ஆசை நிறைவேறவில்லை.

மங்கி கேட் சர்ச்சை
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஹர்பஜன் சிங் இடையே நடைபெற்ற மங்கி கேட் சர்ச்சை, மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. சிட்னி டெஸ்ட் போட்டியின் போது சைமண்ட்ஸை, ஹர்பஜன் சிங் மங்கி என்று திட்டியதாக புகார் தரப்பட்டது. நிறவெறியுடன் ஹர்பஜன் நடந்து கொண்டதாக ஐசிசியும் விசாரணை நடத்தியது ஆனால் இந்த புகாரில் உண்மை இல்லை என்று இறுதியில் தெரியவந்தது.

மதுபோதைக்கு அடிமை
சைமண்ட்ஸ் மது போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இதன் காரணமாக 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியிலிருந்து சைமண்ட்ஸ் நீக்கப்பட்டார். அவருடைய ஓப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ஐபிஎல் தொடரில் விளையாடிய போது மது போதையில் சாஹலை மாடியிலிருந்து தூக்கி எறிய சைமண்ட்ஸ் முயற்சித்ததாகவும் அண்மையில் புகார் எழுந்தது. இதேபோன்று மைதானத்துக்குள் நிர்வாணமாக ஓடி வந்த ரசிகர் ஒருவரை தாக்கி சர்ச்சையிலும் சிக்கினார் சைமண்ட்ஸ்.


Click it and Unblock the Notifications