Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சைமண்ட்ஸ் சாவிலும் கூட இருந்த நாய்கள்.. வளர்த்த நாய்கள் காட்டிய விஸ்வாசம்.. நெஞ்சை உருக்கும் தகவல்

குயின்ஸ்லாந்து : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்ததில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதனை நேரில் பார்த்தவர்கள் சொன்ன விஷயம் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.

Recommended Video

ஆஸி. Ex.கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம்: கார் விபத்தில் பலியான சோகம்!

சைமண்ட்ஸ் தனது வீட்டில் 2 நாய்களை பல வருடமாக வளர்த்து வருகிறார். தற்போது தனது செல்லப் பிராணிகள் முன் தான் உயிரை விட்டுள்ளார்.

46 வயதான சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வசித்து வந்தார்.

கார் விபத்து

கார் விபத்து

சனிக்கிழமை இரவு, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் டவுன்ஸ்வெயில் நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் காரில் சென்ற போது தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹார்வே ரேஞ்ச் சாலையில், அலைஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அந்த சாலை குறுகியதாக இருக்கும். அதனை விரிவுப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

செல்லப் பிராணிகள்

செல்லப் பிராணிகள்

இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார், சாலையோரத்தில் இருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சைமண்ட்ஸ் உயிரிழந்துவிட்டார். எனினும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் சைமண்ட்சின் சடலத்தை பார்த்து நாய் வித்தியாசமாக குரைத்துள்ளது. இதனை அடுத்து அந்த வழியாக வந்தவர்கள், சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கியதை அறிந்து போலீசாருக்கு தகவல் தந்தனர்.

பாச போராட்டம்

பாச போராட்டம்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசாரும், மருத்துவக்குழுவும் வந்து சைமண்ட்ஸை பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். அதன் பிறகு சைமண்ட்சின் சடலத்தை மீட்க போலீசார் முயற்சி எடுத்தனர். ஆனால் சைமண்ட்ஸை விட்டு பிரிய மறுத்த 2 நாய்களும், போலீசாரை சடலம் அருகே வரவிடாமல் தடுத்துள்ளது. இதனை அங்கு பார்த்த பலரின் மனதும் உருகியது

பிரிய மறுத்த நாய்கள்

பிரிய மறுத்த நாய்கள்

செல்லப் பிராணிகளின் பாச போராட்டத்தை வெல்ல போலீசார் பல முயற்சிகள் எடுத்தனர். பின்னர் ஒரு வழியாக 2 நாய்களும் அழைத்து செல்லப்பட்ட பிறகே சைமண்ட்சின் சடலத்தை போலீசார் மீட்டனர். சைமண்ட்ஸ் தாம் ஆசையாக வளர்த்த நாய் முன்பு உயிரை விட்டுள்ளார்.அதன் பின் அவரது சடலத்தை தொடவிடாமல் நாய்கள் தடுத்த சம்பவம் காண்போர் மனதை கரைய வைத்துள்ளது.

Story first published: Sunday, May 15, 2022, 14:05 [IST]
Other articles published on May 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+