Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரர்களுக்கு ஆணவம் இருக்கிறது.. பேட்டிங் படுமோசம்.. வெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்

பார்பிடாஸ் : இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆணவம் தலைக்கேறி விட்டதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ் கடுமையாக குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இது முடிந்து நான்கு நாட்கள் ஆகியும் இன்னும் பல பிரபலங்கள் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் ஆன்டி ராபர்ட்ஸ், பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அதில் இந்திய கிரிக்கெட்டில் ஆணவம் தலைக்கு ஏறி இருக்கிறது. இந்திய வீரர்கள் மற்ற அணிகளை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட் முக்கியமா இல்லை ஒரு நாள், டி20 போட்டி முக்கியமா என்பதில் இந்தியா விரைவில் கவனம் செலுத்த வேண்டும்.

Andy Roberts criticize arrogance which has crept in to indian team

டி 20 கிரிக்கெட் பிரச்சினையே இல்லை. ஏனென்றால் அங்கு பேட்டிற்கும் பந்திருக்கும் சம போட்டி என்பது கிடையாது. இந்திய அணி உலக டெஸ்ட் பைனலில் தங்களுடைய பேட்டிங் வலிமையை காட்டும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் ஒருவர் கூட நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடவில்லை. ரகானே கடுமையாக போராடினாலும் பந்து அவர் கையில் பட்டு காயம் அடைந்தார்.

கில் சில சாட்டுகளை சிறப்பாக விளையாடினாலும் அவர் லெக் டெம்பிள் நின்று விளையாடுகிறார். விராட் கோலி ஒரு அபாரமான பந்தின் மூலம் பெவிலியன் திரும்பினார். ஆனால் உண்மையில் இந்திய அணி சில திறமை வாய்ந்த வீரர்களை வைத்திருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு நான் நினைவு கூற விரும்புகிறேன்.

ஆனால் சொந்த மண்ணை தாண்டி இந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவது இல்லை. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டதை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு கொஞ்சம் கூட இருக்கவில்லை. காரணம் அவர்கள் நிச்சயமாக சொதப்பி விடுவார்கள் என்று எனக்கு தெரியும். இரண்டு இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது.

Story first published: Thursday, June 15, 2023, 17:04 [IST]
Other articles published on Jun 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+