கேபெர்ஹா: கிரிக்கெட் உலகில் இமாலய சாதனையை படைத்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார். தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் 8000 ரன்களை தாண்டிய ஐந்தாவது வீரர் என்ற சாதனையையும் அவர் செய்து இருக்கிறார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவர் 40 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அப்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்து இருந்தார். இதன் மூலம் இலங்கை அணிக்காக 8000 டெஸ்ட் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்று பெருமையை பெற்று இருக்கிறார்.

முன்னதாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களான குமார் சங்ககாரா (12,400 ரன்கள்), மகிளா ஜெயவர்த்தனே (11,814 ரன்கள்) ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்கள் என்று மைல்கல்லை கடந்து இருந்தனர். அவர்களுக்கு அடுத்ததாக மூத்த வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் தற்போது 116 போட்டிகளில் 8006 ரன்கள் எடுத்து இருக்கிறார்.
மேலும், தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் பேட்ஸ்மேன்களில் 8000 ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார். "ஃபேப் ஃபோர்" (Fab Four) என அழைக்கப்படும் ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை தொடர்ந்து ஐந்தாவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்து இருக்கிறார்.
அவர் 205 இன்னிங்ஸ்களில் 8000 டெஸ்ட் ரன்களை எடுத்து இருப்பதன் மூலம் அதிக இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டிய மூன்றாவது வீரர் என்ற மோசமான சாதனையையும் செய்து இருக்கிறார். முன்னதாக இங்கிலாந்தின் அலெக் ஸ்டீவர்ட் 221 இன்னிங்ஸ்களிலும், ஆஸ்திரேலியாவின் மார்க் வாஹ் 206 இன்னிங்ஸ்களிலும் 8000 டெஸ்ட் ரன்களை கடந்து இருந்தனர்.
ஏஞ்சலோ மேத்யூஸ் 205 இன்னிங்ஸ்களில் 8000 ரன்களை கடந்து இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இந்தியாவின் விவிஎஸ் லக்ஷ்மன் இருக்கிறார். அவர் 202 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார்.