Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்க்கை ஒரு வட்டம்.. ஷகிபுல் ஹசனை பழிவாங்கிய மேத்யூஸ்.. Timed out சர்ச்சைக்கு இலங்கை தரமான பதிலடி

டெல்லி : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் வினோதமான முறையில் ஆட்டம் இழந்தது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

களத்திற்கு தாமதமாக வந்ததாக கூறி வங்கதேச அணி நடுவரிடம் முறையிட்டது. இதன் காரணமாக விதியை பயன்படுத்தி நடுவர் மேத்யூஸ்க்கு பந்தை எதிர்கொள்ளாமலேயே டைம் அவுட் என்ற முறையில் அவுட்டு வழங்கினார்.

Angelo Mathews gives send off to Shakib al Hasan after taking his wicket

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த மாதிரி அவுட் ஆனது மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்கதேசம் அவுட் கேட்டபோது தாம் களத்திற்கு வந்து விட்டதாகவும் ஹெல்மெட் மாற்றம் தான் வெளியே சென்றதாகவும் மேத்யூஸ் ஷகிபுல் ஹசனிடம் கெஞ்சி பேசினார். ஆனால் ஷகிபுல் ஹசனும் அதற்கு செவி சாய்க்காமல் முடியவே முடியாது என பதில் அளித்து விட்டார்.

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வங்கதேச அணி மீண்டும் பேட்டிங் செய்தபோது 280 என்ற இலக்கை எதிர்கொண்டு விளையாடுகிறது. அப்போது வங்கதேச அணியின் கேப்டன் ஷகிபுல் ஹசன் அதிரடியாக விளையாடி சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். 65 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்த போது பந்து மேத்யூஸ் கைக்கு சென்றது.

அப்போது மேத்யூஸ் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி ஸ்லோ பால் ஒன்றை வீச அதனை அடிக்க முற்பட்டு ஷகிபுல் ஹசன் ஆட்டமிழந்தார் இதன் மூலம் சதம் அடிக்கும் வாய்ப்பு ஷகிபுல் ஹசனுக்கு பறிபோனது. இதனை எடுத்து ஷகிபுல் ஹசன் செல்லும்போது கை கடிகாரத்தை காட்டி மேத்யூஸ் இந்த விக்கெட்டை கொண்டாடினார்.

இதன் மூலம் தம்மை ஷகிபுல் ஹசன் ஆட்டம் இழக்க வைத்ததற்கு தக்க பதிலடி ஏஞ்சலோ மேத்யூஸ் கொடுத்திருக்கிறார். இதனை தற்போது இலங்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி விஜயின் வாழ்க்கை ஒரு வட்டம் டா என்ற டயலாக்கை இலங்கை ரசிகர்கள் போட்டு வங்கதேச ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

Story first published: Monday, November 6, 2023, 23:30 [IST]
Other articles published on Nov 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+