Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: 18 பந்துகளில் 43 ரன்கள்.. சன்ரைசர்ஸ் ஆட்டத்தையே மாற்றிய அங்கீத் வர்மா? 3 வயதில் தாயை இழந்தவர்

பெங்களூரு: ஐபிஎல் 2026 சீசனின் முக்கிய ஆட்டம் ஒன்றில் நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி கடும் நெருக்கடியில் இருந்தபோது, கீழ் வரிசையில் களமிறங்கிய அங்கித் வர்மா அதிரடியாக விளையாடி போட்டியைத் திருப்புமுனைக்கு இட்டுச் சென்றார். அவர் வெறும் 18 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் நான்கு சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும்.

அங்கித் வர்மா ஆட்டமிழந்த நேரத்தில், அவரை அவுட் செய்த விராட் கோலி மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். கேட்ச் பிடித்தவுடன், போட்டி திசைமாறிவிட்டதே என்ற எண்ணத்தில் பந்தை கோபத்துடன் எறிந்து தனது மனச்சோர்வைப் பிரதிபலித்தார். சன்ரைசர்ஸ் அணி முதலில் களமிறங்கி 29 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே தடுமாறியது.

இந்த கடினமான சூழ்நிலையில், இஷான் கிஷன் மற்றும் ஹென்றிச் கிளாசன் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இஷான் கிஷன் 80 ரன்களும், கிளாசன் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த பிறகு, மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சிரமப்பட்டனர். அந்தக் கட்டத்தில்தான் அங்கித் வர்மா களமிறங்கி, தனது அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான அங்கித் வர்மா, கடந்த சீசனிலும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடியவர். அந்த சீசனில் 14 போட்டிகளில் மொத்தமாக 236 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 166 ஆக இருந்ததுடன், 20 சிக்ஸர்களும் 12 பவுண்டரிகளும் விளாசி அசத்தினார். நிகழாண்டு சீசனின் முதல் போட்டியிலேயே தனது முத்திரையைப் பதித்து பலரையும் கவர்ந்துள்ளார்.

அங்கித் வர்மாவின் வாழ்க்கை பல சோதனைகள் நிறைந்ததாக அமைந்திருந்தது. அவருக்கு மூன்று வயதாக இருக்கும்போது அவரது தாயார் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது தந்தை மறுமணம் செய்துகொண்டதால், குழந்தைப் பருவத்தில் பாட்டியின் கிராமத்தில் வளர்ந்தார். அவரது மாமா அமித், வர்மாவின் கிரிக்கெட் திறமையை இனம் கண்டு, முறையான பயிற்சி கிடைக்குமாறு ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்தார்.

மாமா அமித், தினமும் 13 கிலோமீட்டர் சைக்கிளிலேயே அங்கித் வர்மாவை பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். வெறும் ₹3,000 மாத வருமானம் பெற்றாலும், தனது மருமகனுக்கு ₹1,200 மதிப்புள்ள ஷூக்களை வாங்கிக் கொடுத்து அவரது கனவுக்கு ஆதரவளித்தார். சோர்வடையும் ஒவ்வொரு முறையும் ஹர்திக் பாண்டியா சகோதரர்கள் வெறும் மேகியை உண்டு எவ்வாறு வெற்றி பெற்றனர் என்று கூறி, அங்கித்தை உற்சாகப்படுத்தியுள்ளார்.கடந்த ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி அங்கித் வர்மாவை ₹30 லட்சத்துக்கு வாங்கியது. தற்போது அதே சம்பளத்துடன் அவர் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Story first published: Saturday, March 28, 2026, 21:56 [IST]
Other articles published on Mar 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+