Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் மிகப் பெரிய மேட்ச் வின்னர் இவர்தான்.. ஜாம்பவான் வீரரை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்!

மும்பை : முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்தியா உருவாக்கிய மிகப் பெரிய மேட்ச் வின்னர் என ஒரு ஜாம்பவான் வீரரைப் பற்றி குறிப்பிட்டு புகழ்ந்து இருக்கிறார்.

Recommended Video

Harbhajan singh says Anil Kumble is the biggest match winner

இந்திய அணியில் கடந்த 20 ஆண்டுகளில் மேட்ச் வின்னர் என்றால் யுவராஜ் சிங் மற்றும் தோனி ஆகிய இருவர் தான் முதலில் நினைவுக்கு வருவார்கள்.

ஆனால், அவர்களையும் தாண்டி ஒரு சுழற் பந்துவீச்சாளரைத் தான் ஹர்பஜன் சிங் மிகப் பெரிய மேட்ச் வின்னர் என கூறி உள்ளார்.

நல்ல புரிதல்

நல்ல புரிதல்

ஹர்பஜன் சிங் தன் கிரிக்கெட் கேரியரின் முதல் பகுதியில் பெரும்பாலான போட்டிகளில் அனில் கும்ப்ளே உடன் தான் ஆடினார். இருவருமே சுழற் பந்துவீச்சாளர்கள் என்றாலும் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. இருவரும் வேறு, வேறு முறையில் பந்து வீசி வந்தனர்.

கேப்டன்சியிலும் ஆடி உள்ளார்

கேப்டன்சியிலும் ஆடி உள்ளார்

அனில் கும்ப்ளே ஓய்வு பெரும் வரை அவருடன் பல போட்டிகளில் ஆடி உள்ளார் ஹர்பஜன் சிங். அவரது கேப்டன்சியிலும் கூட அவர் அணியில் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில், அனில் கும்ப்ளே பற்றிய தன் பார்வையை கூறினார்.

மிகப் பெரிய மேட்ச் வின்னர்

மிகப் பெரிய மேட்ச் வின்னர்

"என் பார்வையில் இந்திய அணிக்கு ஆடிய மிகப் பெரிய வீரர் அனில் கும்ப்ளே தான். இந்தியா உருவாக்கிய மிகப் பெரிய மேட்ச் வின்னர் அவர்தான்." என நேரடியாக அனில் கும்ப்ளேவை மேட்ச் வின்னர் என வெகுவாக பாராட்டினார் ஹர்பஜன் சிங்.

மனது இருந்தால் விக்கெட்

மனது இருந்தால் விக்கெட்

"சிலர் அவர் பந்தை சரியாக சுழலச் செய்வதில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், அவர் மனது இருந்தால் பந்து சுழன்றாலும், இல்லாவிட்டாலும் பேட்ஸ்மேனை அவுட் ஆக்கலாம் என காட்டினார்" என அனில் கும்ப்ளேவின் பந்துவீச்சு குறித்து பகிர்ந்தார் ஹர்பஜன்.

அர்ப்பணிப்பு கொண்ட வீரர்

அர்ப்பணிப்பு கொண்ட வீரர்

மேலும், "அனில் கும்ப்ளேவுக்கு இருந்ததில் பாதி அளவுக்கு ஒருவருக்கு போட்டி குணம் இருந்தால் அவர் சாம்பியனாகி விடுவார். அவருடன் பல ஆண்டுகள் ஆட எனக்கு வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். அவர் நம்பவே முடியாத அளவுக்கு அர்ப்பணிப்பு கொண்ட வீரர்" என புகழ்ந்தார் ஹர்பஜன் சிங்.

மித வேகப் பந்துவீச்சு

மித வேகப் பந்துவீச்சு

அனில் கும்ப்ளே பந்தை சுழல வைக்காவிட்டாலும் வேறு ஒரு வித்தை வைத்திருந்தார். சுழற் பந்துவீச்சை அவர் அளவுக்கு வேகமாக யாரும் வீச மாட்டார்கள். கிட்டத்தட்ட மித வேகப் பந்துவீச்சு போல வீசிய அவர் அதை வைத்தே பெரிய அளவில் விக்கெட் வேட்டை நடத்தினார்.

அதிக டெஸ்ட் விக்கெட்கள்

அதிக டெஸ்ட் விக்கெட்கள்

டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்கள் சாய்த்து, அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்கள் வீழ்த்தி அதிலும் அதிக ஒருநாள் போட்டி விக்கெட்கள் வீழ்த்திய இந்தியராக இருக்கிறார்.

Story first published: Sunday, June 21, 2020, 20:18 [IST]
Other articles published on Jun 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+