Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி ரகசியங்களை 'லீக்' செய்தார்.. கும்ப்ளேவுக்கு எதிராக கிளம்பிய மற்றொரு பகீர் புகார்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் அனில்கும்ப்ளேவுக்கு எதிராக புதிதாக ஒரு குற்றச்சாட்டு வெளிக்கிளம்பியுள்ளது.

பயிற்சியாளராக, கும்ப்ளேவின் பதவிக்காலம் ஜூன் 18ம் தேதியோடு முடிவடைய உள்ளது. இதையடுத்து அவரை அப்பதவியில் நீடிக்க செய்ய பிசிசிஐ தயாராக இல்லை. புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது பிசிசிஐ.

வீரர்களுக்கான சம்பளத்தை 150 சதவீதம் உயர்த்த கேட்டார் கும்ப்ளே. கேப்டன் பதவியில் இருப்பவருக்கு கூடுதல் சுமை இருக்கும் என்பதால் ஊதியத்தில் 25 சதவீதம் அதிகம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

இந்த கோரிக்கையால்தான் கோபமடைந்து கும்ப்ளேயை அப்பதவியில் தொடரச் செய்யாமல் தவிர்க்க பிசிசிஐ திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் விராட் கோஹ்லிக்கும், கும்ப்ளேக்கும் சில மாதங்களாகவே மோதல் இருந்து வருவதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கேப்டனுடன் மோதல்

கேப்டனுடன் மோதல்

இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான டெஸ்ட் தொடரில், 4வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. அப்போது கேப்டன் கோஹ்லிக்கு கூட தெரிவிக்காமல், அணியில் குல்தீப் யாதவை சேர்த்தாராம் கும்ப்ளே. அப்போதுதான் இருவருக்கும் மோதல் வெடித்துள்ளது என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

புதுக்குற்றச்சாட்டு

புதுக்குற்றச்சாட்டு

இந்த நிலையில் மற்றொரு ஆங்கில நாளிதழ் இன்று வெளியிட்ட செய்தியில் கும்ப்ளேவுக்கு எதிராக மற்றொரு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் பெயரை வெளியிட விரும்பாமல் கூறிய தகவல் என்ற பெயரில் இச்செய்தியில் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் குரூப்

வாட்ஸ்அப் குரூப்

அந்த செய்தி இதுதான்: அனில்கும்ப்ளே தனக்கு நெருக்கமான, நம்பககரமான சில பத்திரிகையாளர்களை கொண்டு ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளார். அந்த வாட்ஸ்அப் குழு மூலமாக நிருபர்களுக்கு சில தகவல்களை தெரிவித்து வந்துள்ளார்.

ரகசிய தகவல்கள்

ரகசிய தகவல்கள்

வாட்ஸ்அப் குழு மூலமாக சில ரகசிய தகவல்களை கும்ப்ளே வெளியிட்டுள்ளார். சீனியர் வீரர்களுடன் கும்ப்ளே நடத்திய தனிப்பட்ட ஆலோசனை குறித்த தகவல்களை வாட்ஸ்அப் குழுவில் நிருபர்களுக்கு கசிய விட்டுள்ளார் கும்ப்ளே. இவ்வாறு அந்த அதிகாரி குற்றம்சாட்டியதாக செய்தி வெளியிட்டுள்ளது அந்த நாளிதழ். கும்ப்ளேவுக்கு எதிராக தொடர்ந்து கிளம்பும் குற்றச்சாட்டுகளால், அவர் பயிற்சியாளராக தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிறப்பாக ஆடிய இந்தியா

சிறப்பாக ஆடிய இந்தியா

புதிய பயிற்சியாளர் நேர் காணலுக்கு கும்ப்ளேவும் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும், மோதல்கள் மற்றும் புகார்கள் கிளம்புவதால், கும்ப்ளேவை பயிற்சியாளராக தொடரச் செய்ய பிசிசிஐ விரும்பாது என தெரிகிறது. கும்ப்ளே பயிற்சியாளராகியபிறகு கடந்த ஓராண்டில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணி சிறப்பாக வெற்றி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 1, 2017, 15:19 [IST]
Other articles published on Jun 1, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+