ராகுல் பற்றி உங்களுக்கு தெரியாது.. ஏன் அவருக்கே தெரியாது.. பாராட்டா இல்லை கிண்டலா.. கும்ப்ளே பேச்சு
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே எல் ராகுல் தற்போது ரசிகர்களுக்கு பஞ்சிங் பேக் போல் ஆகிவிட்டார்.
காரணம் தொடக்க வீரராக களம் இறங்கும் அவர் முக்கிய போட்டிகளில் தொடர்ந்து சொதப்புவதால் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றை திறந்தாலே ராகுல் குறித்து மீம்ஸ்களாக குவிந்து வருகின்றன.

கும்ப்ளேவின் அனுபவம்
கும்ப்ளேவின் அனுபவம்

ஆட்டத்தை மாற்றினார்
உனக்கு என்ன வருமோ அதை செய் என்று பயிற்சியாளராக சொல்வேன். பவர் பிளேவில் ராகுலை கட்டுப்படுத்த எந்த பந்துவீச்சாளராலும் முடியாது.ஆனால் ஐபிஎல் போன்ற தொடரின் விளையாடும் போது ராகுலை நம்பி தான் மொத்த அணியும் இருப்பதால் அவர் பொறுமையாக விளையாட தொடங்கி விட்டார்.கடைசி வரைக்கும் விளையாட வேண்டும் என்பதற்காக தனது ஆட்டத்தை அவர் மாற்றிக் கொண்டார்.

ஒரே பிரச்சினை
நீங்கள் வெளியிலிருந்து என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் களத்தில் என்ன நடக்கிறது என்று யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் ராகுலுக்கு இருக்கும் ஒரு பிரச்சனையே அவர் திடீரென்று நன்றாக விளையாடுவார். திடீரென்று அமைதியாக ஆடுவார்.இந்திய அணியில் அவருடைய பொறுப்பு வித்தியாசமானது. என்னை பொறுத்த வரைக்கும் அதிரடியாக ஆட வேண்டும்.

ஆட்டத்தை மாற்றினார்
நான் பயிற்சியாளராக இருந்தபோது அப்படித்தான் சொன்னேன். அவர் பேட்டிங் செய்யும்போது அதிரடியாக விளையாடி எதிரணியின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும்.ஆனால் அவர் அதிரடியாக ஆடுவதும், பிறகு அமைதியாக ஆடுவதும் என தனது ஆட்டத்தை மாற்றிக்கொண்டார்.

தெரியவில்லை
என்னை பொறுத்த வரைக்கும் அவர் அன்றைய நாளில் எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்து அவர் விளையாடுகிறார். அதிரடியாக ஆட வேண்டும் என நினைத்தாலும் சரி இல்லை பொறுமை காக்க வேண்டும் என்றாலும் சரி, அவர் எந்த காரணத்திற்க்காக இப்படி மாறினார் என்பது குறித்து தெரியவில்லை.


Click it and Unblock the Notifications