தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்
Recommended Video
பெங்களூரு : பரிக்சா பி சர்ச்சா 2020 நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கிரிக்கெட் வீரர்கள் கும்ப்ளே, டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷமனை எடுத்துக்காட்டி பேசினார்.
இதையடுத்து பிரதமருக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த அனில் கும்ப்ளே, பிரதமர் பேசிய வீடியோ கிளிப்பிங்கையும் இணைத்து தேர்வை சந்திக்கவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கடந்த 2002ல் மேற்கு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தாடையில் அடிப்பட்ட நிலையிலும் கட்டுடன் 14 ஓவர்களை அனில் கும்ப்ளே போட்டார். அவரது இந்த அர்ப்பணிப்பு உணர்வு அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. இந்த நிகழ்வையே பிரதமர் மோடி மேற்கோள் காட்டி பேசினார்.

மாணவர்களுடன் உரையாடிய மோடி
மூன்றாவது ஆண்டாக பரிக்சா பி சர்ச்சா நிகழ்ச்சியில் மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

லக்ஷ்மன் -டிராவிட் பார்ட்னர்ஷிப் குறித்து பேச்சு
பரிட்சைக்கு தயாராகும் மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட்டின் பார்ட்னர்ஷிப் குறித்தும் தாடையில் காயத்துடன் அனில் கும்ப்ளே போட்ட 14 ஓவர்கள் குறித்தும் எடுத்துக்காட்டி பேசினார்.

4 ரன்களில் லாராவை ஓடவிட்ட வீரர்
கடந்த 2002ல் மேற்கிந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தாடையில் பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், அந்த காயத்திற்கு கட்டுப்போட்டுக் கொண்டு மைதானத்திற்கு வந்து 14 ஓவர்களை போட்டு 4 ரன்களில் பிரைன் லாராவை பெவிலியனுக்கு அனுப்பினார் அனில் கும்ப்ளே.
மாணவர்களுக்கு வாழ்த்து
இந்நிலையில் தன்னை மேற்கோள் காட்டி மாணவர்களிடையே பேசிய பிரதமர் மோடிக்கு முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். மோடி பேசிய வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications