Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாபை பஞ்சு பஞ்சாக்கியது... குறைந்த ஸ்கோர் எடுத்தும் ஹைதராபாத் அபார வெற்றி

Recommended Video

பஞ்சாப்பை பந்தாடியது ஹைதராபாத் !

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிரடி திருப்பம் நிறைந்த ஆட்டம் இன்று நடந்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிகவும் சுலபமான இந்த இலக்கை எட்ட முடியாமல் பஞ்சாப் அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹைதராபாத் 13 ரன்களில் வென்றது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 24 ஆட்டங்கள் முடிந்துள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 ஆட்டங்களில் 5 வெற்றியுடன் 10 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 6 ஆட்டங்களில் நான்கில் வென்று 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

புள்ளிப் பட்டியலில் 2வது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் ஹைதராபாத்தில் இன்று மோதின.

தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி

தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி

பஞ்சாப் அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. டெல்லி அணியிடம் வென்ற அந்த அணி, பெங்களூருவிடம் தோல்வி அடைந்தது. அதன்பிறகு, சிஎஸ்கே, ஹைதராபாத், கொல்கத்தா, மீண்டும் டெல்லி அணியை வென்றுள்ளது. தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் வென்றுள்ளது.

ஹைதராபாத்தின் மிரட்டல் ஆட்டம்

ஹைதராபாத்தின் மிரட்டல் ஆட்டம்

இந்த சீசனில் மிகவும் வலுவான மற்றும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக ஹைதராபாத் உள்ளது. ராஜஸ்தான், மும்பை, கொல்கத்தா என்று ஹாட்ரிக் வெற்றி பெற்றது. பஞ்சாப், சிஎஸ்கே அணிகளிடம் தோல்வியடைந்த ஹைதராபாத், மும்பையை வென்றுள்ளது.

ராஜ்புத் 5 விக்கெட் வீழ்த்தினார்

ராஜ்புத் 5 விக்கெட் வீழ்த்தினார்

இரு அணிகளும் இரண்டாவது முறையாக இந்த சீசனில் இன்று மோதின. முதல் ஆட்டத்தில் பஞ்சாப் வென்றது. இன்றைய ஆட்டத்தில் டாஸை வென்ற பஞ்சாப் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். அங்கித் ராஜ்புத் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

மற்றொரு திரில் வெற்றி

மற்றொரு திரில் வெற்றி

133 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல் 32, கிறிஸ் கெயில் 23 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை தந்தனர். ஆனால் அவர்கள் ஆட்டமிழந்த பிறகு வந்தவர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். 9 விக்கெட்களை இழந்த நிலையில் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்களுக்கு பஞ்சாப் ஆட்டமிழந்தது.

ஹைதராபாத் அணி 13 ரன்களில் திரில் வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் குறைந்த ரன்கள் எடுத்தும் வென்றதுபோல, இந்த ஆட்டத்திலும் ஹைதராபாத் வென்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

Story first published: Thursday, April 26, 2018, 23:50 [IST]
Other articles published on Apr 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+