Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு மற்றொரு தொடர் வெற்றி பார்சேல்…..

கட்டாக்: டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டியைத் தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டித் தொடரையும் வெல்வதற்கு இந்திய அணி தயாராக உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்று வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கி்ல் வென்றது.

Another series win for India


அதைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் இன்று துவங்குகிறது. முதல் ஆட்டம் கட்டாக்கில் நடக்கிறது. 22ல் இந்தூரிலும், 24ல் மும்பையிலும் போட்டிகள் நடக்க உள்ளன.

முன்னதாக, இலங்கைக்கு சென்ற இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் ஒயிட்வாஷ் செய்தது.

இந்தியா -இலங்கை அணிகள் இதுவரை, 11 முறை டி-20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 7-4 என இந்தியா முன்னிலையில் உள்ளது. கடைசியாக நடந்த நான்கு ஆட்டங்களிலும் இந்தியா வென்றுள்ளது.

அடுத்து தென்னாப்பிரிக்கா தொடர் நடக்க உள்ள நிலையில், பாசில் தம்பி, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஜெய்தேவ் உனகட், முகம்மது சிராஜ் ஆகியோருக்கு திறமையை காட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுவரை நடந்துள்ள இரண்டு தொடர்களையும் வென்றது போல், டி-20 தொடரையும் இந்தியா வெல்வதற்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. அதே நேரத்தில், முதல் ஒருதினப் போட்டியில் இலங்கை அணி மிரள வைத்தது, கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நினைவில் இருக்கும்.

2000 ரூபாய்க்கு சில்லறை கேட்டால், அதுவே எங்களுக்கு சில்லறைதான்டா என்று ஆர்.கே. நகர்வாசிகள் கூறுவதைபோல, இந்தத் தொடரை இந்தியா சுலபமாக எடுத்துக் கொள்ளாமல், அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற முயற்சி செய்யும் என, எதிர்பார்க்கலாம்.

இந்திய அணி விபரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், டோணி, மனீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டயா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ப்ரா, யுஸ்வேந்திர சாஹல், முகம்மது சிராஜ், தீபக் ஹூடா, ஜெய்தேவ் உனகட், பாசில் தம்பி.
Story first published: Friday, December 22, 2017, 12:27 [IST]
Other articles published on Dec 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+