
தென்னாப்பிரிக்கா கை ஓங்கியுள்ளது
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் தென்னாப்பிரிக்காவில் இதுவரை, 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளன. அதில், 5ல் தென்னாப்பிரிக்கா வென்றது. ஒரு தொடர் டிராவில் முடிந்தது. இரு அணிகளும் இதுவரை, 17 டெஸ்ட்களில் விளையாடியுள்ளன.

2ல் மட்டுமே இந்தியா
அதில், 2ல் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. தென்னாப்பிரிக்கா, 8ல் வென்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தன. இரு அணிகளும் கடைசியாக, 2013ல் 2 டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடின. அதில் 1-0 என தென்னாப்பிரிக்கா வென்றது. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம், கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான அணியை பாதிக்காது என, கோச் ரவிசாஸ்திரி நம்பிக்கையுடன் உள்ளார்.

கோச் என்ன கூறுகிறார்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா வென்ற தொடர்கள் எல்லாம், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானவை. ஆனால், தென்னாப்பிரிக்கா மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது.

4 ஆண்டுகளுக்கு முன் சவால்
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்தால், தென்னாப்பிரிக்கா தொடர் சவாலாகவே இருக்கும் என்று கூறியிருப்பேன். ஆனால், தற்போதுள்ள வீரர்களில், 13 பேர் அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடக் கூடிய அணியாக இந்திய அணி உள்ளது. அதனால், தென்னாப்பிரிக்கா தொடரில் நமது வீரர்கள் சிறப்பாகவே செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் சாஸ்திரி.

தென்னாப்பிரிக்கா தொடரை வெல்லுமா
கடந்த, 2015ல், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. அதன் பிறகு, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இன்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை என அனைத்து டெஸ்ட் தொடரையும் வென்று மிகவும் வலுவாக உள்ளது இந்திய அணி.

10வது தொடர் வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2015ல் இந்தியாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அது இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். தென்னாப்பிரிக்காவில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற சாதனையை முறியடித்து, தொடர்ந்து, 10வது தொடர் வெற்றியை கோஹ்லி அணி பெறுமா?


Click it and Unblock the Notifications