Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

38 பந்தில் 92 ரன்.. 8 சிக்ஸ், 8 ஃபோர்.. அனுஜ் ராவத் வெறியாட்டம்.. டிபிஎல் தொடரில் நடந்த சம்பவம்

டெல்லி: டெல்லி பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரின் 21 வது போட்டியில், புரானி டெல்லி 6 அணியின் கேப்டன் அனுஜ் ராவத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்துவீச்சாளர்களை திணறடித்துள்ளார். அவுட்டர் டெல்லி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 38 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அவர் அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அவுட்டர் டெல்லி அணி 19.1 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அவுட்டர் டெல்லி அணி தரப்பில் அக்ஷய் சைனி 40 பந்துகளில் 49 ரன்களும், பிரியான்ஷ் ஆர்யா 46 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். புரானி டெல்லி அணி தரப்பில் பங்கஜ் ஜஸ்வால் 3 விக்கெட்டுகளையும், திக்வேஷ் ரதி, ரஜினிஷ் தாதர், உத்தவ் மோகன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

Anuj Rawat smashes 92 off 38 Balls and helps Purani Delhi 6 to victory in DPL 2026

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய புரானி டெல்லி அணி, 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் தவித்தது. அப்போது களமிறங்கிய கேப்டன் அனுஜ் ராவத், முதல் பந்திலிருந்தே அவுட்டர் டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்கத் தொடங்கினார்.

மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளை பறக்கவிட்ட அவர், 8 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 16 பவுண்டரிகளுடன் வெறும் 38 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இவருடன் கூட்டணி அமைத்து விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஆர்யன் கௌர் 40 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மிட்செல் மார்ஷ் வரலாற்று சாதனை.. ஒரே ஆண்டில் அதிக ரன் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ரெக்கார்டு

மிட்செல் மார்ஷ் வரலாற்று சாதனை.. ஒரே ஆண்டில் அதிக ரன் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ரெக்கார்டு

இவர்களின் அதிரடி ஆட்டத்தால் புரானி டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அவுட்டர் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அனுஜ் ராவத், இந்த டெல்லி பிரீமியர் லீக் தொடரிலும் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சவுரவ் கங்குலி, அவரது மனைவிக்கு கொலை மிரட்டல்.. 6 மாதமாக வந்த கடிதங்கள்.. போலீசார் தீவிர விசாரணை

Also Read

சவுரவ் கங்குலி, அவரது மனைவிக்கு கொலை மிரட்டல்.. 6 மாதமாக வந்த கடிதங்கள்.. போலீசார் தீவிர விசாரணை
Story first published: Tuesday, August 11, 2026, 10:34 [IST]
Other articles published on Aug 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+