Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ தலைவரானார் அனுராக் தாக்கூர்... கிரிக்கெட் வாரியத்தின் இளம் தலைவர் இவர்தான்!

மும்பை: மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், பிசிசிஐ புதிய தலைவராக அனுராக் தாக்கூர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட்கவுன்சிலின் சேர்மனாக ஷசாங் மனோகர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். அந்த அமைப்பின் விதிப்படி ஜசிசி சேர்மன் பதிவி வகிப்பவர்கள் தங்களது தங்களது கிரிக்கெட் வாரியத்தில் எந்த பொறுபப்பிலும் இருக்கக் கூடாது.

Anurag Thakur becomes youngest BCCI president

அதன்படி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் பிசிசிஐ செயலாளராக இருந்த அனுராக் தாக்கூர், புதிய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, காலியாகும் பிசிசிஐ செயலாளர் பதவிக்கு, மகராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத் தலைவர் அஜய் ஷிர்கேவை தேர்வு செய்ய அனுராக் தாக்கூர் முன்மொழிந்துள்ளார்.

41 வயதான அனுராக் தாக்கூர், பிசிசிஐயின் இளம் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

Story first published: Sunday, May 22, 2016, 11:33 [IST]
Other articles published on May 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+