Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ தடையையும் மீறி சிட்னியில் கோஹ்லியுடன் சுற்றும் நடிகை அனுஷ்கா

சிட்னி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் சிட்னியில் உள்ள டார்லிங் ஹார்பருக்கு சென்று வந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்ற பிறகு தான் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில விதிமுறைகளை விதித்துள்ளது.

காதலிகளுக்கு தடை

காதலிகளுக்கு தடை

கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் ஆஸ்திரேலியா செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் காதலிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா

நடிகை அனுஷ்கா சர்மாவோ தனது காதலர் கோஹ்லியுடன் இருக்க தடையை மீறி ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

சிட்னி

சிட்னி

விராத் கோஹ்லியும், அனுஷ்காவும் சிட்னி நகரில் உள்ள டார்லிங் ஹார்பருக்கு ஜோடி போட்டு சென்றுள்ளனர்.

கோஹ்லி

கோஹ்லி

அணியுடன் சேர்ந்து புத்தாண்டு அன்று பி.கே. படம் பார்த்தேன். படம் மிகவும் பிடித்துள்ளது. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் என்று கோஹ்லி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, January 6, 2015, 10:46 [IST]
Other articles published on Jan 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+