Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லிக்காக சிட்னி சென்ற அனுஷ்கா: அய்யய்யோ என்ன நடக்கப் போகுதோ?

சிட்னி: காதலர் கோஹ்லியை உற்சாகப்படுத்த நடிகை அனுஷ்கா சர்மா சிட்னி சென்றுள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் டோணி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி வரும் வியாழக்கிழமை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறுகிறது.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா காலிறுதிப் போட்டிக்குள் நுழையும் வரை வீரர்களின் மனைவிகள், காதலிகள் ஆகியோர் ஆஸ்திரேலியா செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்திருந்தது. காலிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து வீரர்களின் மனைவிகள் மற்றும் காதலிகள் ஆஸ்திரேலியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Anushka reaches Sydney to cheer Kohli

இந்நிலையில் விராட் கோஹ்லியின் காதலியான நடிகை அனுஷ்கா சர்மா சிட்னி நகருக்கு வந்துள்ளார். முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோஹ்லியை ஊக்குவிக்க அனுஷ்கா சிட்னி வந்தார். அந்த ஆட்டத்தில் இந்தியா சொதப்பியது.

அனுஷ்கா சிட்னியில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பது, கோஹ்லியுடன் டின்னர் என்று ஜாலியாக பொழுதை கழிக்கிறார்.

Story first published: Tuesday, March 24, 2015, 17:15 [IST]
Other articles published on Mar 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+