Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குட்டி தேவதைக்கு பேர் வச்சாச்சு... முதல் புகைப்படத்தை வெளியிட்ட கோலி -அனுஷ்கா ஜோடி!

சென்னை : விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடிக்கு கடந்த மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது தங்களது மகளுக்கு வமிகா என்று பெயர்சூட்டி மகிழ்ந்துள்ள இந்த ஜோடி, குழந்தையின் முதல் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

Anushka Sharma and Virat Kohli name their daughter, Vamika; say our hearts are SO full

மேலும் தங்களது இதயங்கள் நிறைந்துள்ளதாக அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதிக்கு கடந்த மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையொட்டி விராட் கோலி உற்சாக பதிவிட்டிருந்தார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதற்காக அவர் சென்னை வந்துள்ளார். இந்நிலையில் அவரது குட்டி தேவதையின் பெயர் மற்றும் முதல் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குழந்தைக்கு வமிகா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தங்களது குழந்தை தங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும், தூக்கம் குறைந்தாலும் தங்களது இதயங்கள் நிறைந்துள்ளதாகவும் அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பாராட்டிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த பதிவிற்கு கே.எல் ராகுல் உள்ளிட்ட பலர் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் தெரிவித்துள்ளனர். மேலும் விராட் கோலியும் தனது உலகம் ஒரே ப்ரேமில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, February 1, 2021, 12:56 [IST]
Other articles published on Feb 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+