பேட்டில் பட்டு.. அனுஷ்காவை எட்டிய முத்தம்.. சாதனையுடன் "ஹாஃப்" அடித்ததைக் கொண்டாடிய கோஹ்லி!
ஹைதராபாத்: விராத் கோஹ்லுக்கு மட்டுமல்ல, அவரது காதலியா அனுஷ்கா சர்மாவுக்கும் நேற்று மறக்க முடியாத நாள். ஹைதராபாத்தில் தன்னால்தான் இப்படி முடங்கிப் போய் விட்டார் என்ற அவச் சொல்லுக்குள்ளான விராத் கோஹ்லி புதிய சாதனையுடன் அரை சதம் போட்டு இந்தியாவின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்த தருணத்தை அனுஷ்கா சர்மா நிச்சயம் வாழ்க்கையில் மறக்க மாட்டார். கூடவே, விராத் கோஹ்லி, தனக்குக் கொடுத்த பறக்கும் முத்தத்தையும் மறக்கவே மாட்டார்.... வெட்கப் புன்னகை தவழ அதை அவர் வாங்கியதை மனதோடு போட்டு புதைத்து வைத்திருப்பார் காலா காலமும்!
ஹைதராபாத்தில் நேற்று இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியிலும் நேற்று இந்தியா வென்று தொடரையும் கைப்பற்றியது.
நேற்றைய ஆட்டத்தில் மஹளா ஜெயவர்த்தனே சதம் அடித்தது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவின் ஷிகர் தவான் 91 ரன்களைக் குவித்தது இன்னொரு பக்கம் இருந்தாலும், விராத் கோஹ்லி நிகழ்த்திய புதிய சாதனையும், அவர் அனுஷ்காவுக்குக் கொடுத்த பறக்கும் முத்தமும்தான் ஹைலைட்டாக மாறிப் போனது.

பெஸ்ட் ஆட்டம்
நேற்று விராத் கோஹ்லி கொடுத்தது நிச்சயம் அவரது பெஸ்ட்டான ஆட்டங்களில் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. கேப்டனாக இலங்கையை நையைப்புடைத்து வரும் கோஹ்லி நேற்று புதிய சாதனையையும் படைத்தார்.

அதி விரைவாக 6000 ரன்கள்
ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ்தான் அதி விரைவாக 6000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை வைத்துள்ளார். அதை நேற்று தாண்டி சாதனை படைத்தார் கோஹ்லி.

144 போட்டிகளில்
நேற்று கோஹ்லி ஆடியது அவருக்கு 144வது போட்டியாகும். இந்தப் போட்டியில் அவர் அரைசதம் போட்டபோது ஒரு நாள் போட்டிகளில் 6000 ரன்களைத் தொட்டார்.

26 வயது... 20 சதங்கள்
ஒரு நாள் போட்டிகளில் நேற்று எடுத்த 53 ரன்களுடன், 6003 ரன்களைச் சேர்த்துள்ளார் கோஹ்லி. இதில் 20 சதங்கள், 32 அரை சதங்கள் அடக்கமாகும். அவரது பேட்டிங் சராசரி 51.29 ஆகும்.

இந்த வாங்கிக்கோ.. கிஸ்!
முன்னதாக அரை சதம் போட்டவுடன் ஹெல்மட்டைக் கழற்றிய கோஹ்லி, தனது பேட்டை முத்தமிட்டார். அத்தோடு நில்லாமல் அந்த பேட் மூலமாக ஒரு பறக்கும் முத்தத்தையும் கேலரி நோக்கி திருப்பி விட்டார். வேகமாக அந்த முத்தம்.. அங்கே உற்சாகத்துடன் கோஹ்லியை ஊக்குவித்து போட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அனுஷ்கா சர்மாவை நோக்கிச் சென்றது. வெட்கம் முகத்தில் மலர, கண்களில் சின்னதாக கண்ணீர் மல்க, சந்தோஷத்துடன் எழுந்து நின்று கைதட்டி ஏற்றுக் கொண்டார் அனுஷ்கா.

சாதிச்சுட்ட மாப்ளே!
என்னால் கிடைத்த அவப் பெயரை துடைத்து சாதித்து விட்டாய்.. என்பதுதான் அனுஷ்காவின் பார்வையின் அர்த்தமாக தெரிந்தது.

இங்கிலாந்து தொடரில் கிடைத்த அவப் பெயர்
இங்கிலாந்துக்கு இந்திய அணி சென்றிருந்தபோது விராத் கோஹ்லி சரியாகவே ஆடவில்லை. அனுஷ்காவும் அப்போது கோஹ்லியுடன் தங்கியிருந்தார். இதனால் அவரால்தான் கவனம் திசை திரும்பி கோஹ்லி சரியாக ஆடவில்லை என்ற அவப் பெயர் கிடைத்தது.
அந்த அவப் பெயரை தற்போதைய இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் துடைத்து விட்டார் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications