Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னாப்பா கோலி பவுண்டரி அடிப்பா... கணவரை வம்பிழுத்த அனுஷ்கா சர்மா

மும்பை : சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பிற்கு ஏராளமானோர் தங்களது பணிகளை விட்டுவிட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சிலருக்கு வீட்டிலிருந்தே பணிசெய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Recommended Video

IPL 2020 : 5 incidents that changed IPL history

ஆயினும் நான் ரொம்ப பிசி என்று பரபரப்பாக இயங்கி வந்தவர்களுக்கு இந்த முடக்கம் விநோதமான அனுபவத்தையே தந்துள்ளது. இதற்கு விளையாட்டு வீரர்களும் விதிவிலக்கல்ல.

அந்த வகையில் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டிலேயே முடங்கியுள்ளார். ஆனால் தன்னுடைய அன்பு மனைவியுடன் இணைந்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுவரும் வீடியோக்கள், ரூம் போட்டு யோசிப்பாரோ என்ற எண்ணத்தையே ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது.

வீட்டில் முடங்கிய விராட் கோலி

வீட்டில் முடங்கிய விராட் கோலி

சர்வதேச அளவில் லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை முடித்து வைத்துள்ளது கொரோனா வைரஸ் தொற்று. இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். கிரிக்கெட் வீரர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதற்கு கேப்டன் விராட் கோலியும் விதிவிலக்கல்ல..

ஓய்வு கேப்பியா? வறுத்தெடுத்த கொரோனா

ஓய்வு கேப்பியா? வறுத்தெடுத்த கொரோனா

அடுத்தடுத்த தொடர்களில் ஓய்வின்றி விளையாடிவரும் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையில் ஓய்வு அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் விராட் கோலி. ஓய்வின்றி விளையாடுவதால், மனநலம் மற்றும் உடல்நலம் பாதிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஓய்வே வேணாம்டா சாமி என்று கூறும்படியாக வீட்டிற்குள்ளேயே இருக்கும்படியான சூழலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா.

மனைவியுடனான தொடர் பதிவுகள்

மனைவியுடனான தொடர் பதிவுகள்

ஆயினும் கிரிக்கெட் விளையாட முடியவில்லை என்ற வருத்தத்தை தவிர விராட் கோலிக்கு பொழுதை கழிப்பதில் வேறு எந்த சிரமமும் இருப்பதாக தெரியவில்லை. காதல் மனைவியுடன் இணைந்து அவர் செய்யும் பல விஷயங்களையும், கொண்டாட்டங்களையும் தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவரும் அனுஷ்கா சர்மாவும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதன்மூலம் ரசிகர்களுக்கும் அந்த கொண்டாட்டங்கள் கடத்தப்படுகின்றன.

முடியாதென்று மறுக்கும் கோலி

முடியாதென்று மறுக்கும் கோலி

இந்நிலையில் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய பதிவில் விராட் கோலியை அவர் வம்பிழுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். விராட் கோலியை பவுண்டரி அடிக்கும்படி அனுஷ்கா வம்பிழுக்க, அதற்கு கோலி தலையசைத்து மறுப்பு தெரிவிக்கும்படியாக அந்த வீடியோ போகிறது. ஆயினும், அவர் வெளியிட்டுள்ள கேப்ஷனில் அவர்களுக்கிடையிலான புரிதல் வெளிப்படுகிறது.

ரசிகையாக அனுஷ்காவின் செயல்

கிரிக்கெட் விளையாடும் தருணங்களையும், மைதானத்தையும், லட்சக்கணக்கான ரசிகர்களின் அன்பையும் விராட் கோலி கடந்த சில வாரங்களாக மிஸ் செய்வதாகவும், அதனால் அந்த அனுபவத்தை கொடுக்கும்வகையில், ரசிகையாக மாறி பவுண்டரியை அடிக்கும்படி தான் கூறியதாகவும் அனுஷ்கா தனது கேப்ஷனில் கூறியுள்ளார்.

Story first published: Friday, April 17, 2020, 18:05 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+