For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குட்பை சொல்றது அவ்வளவு எளிதல்ல - உருகும் அனுஷ்கா சர்மா

Recommended Video

Anushka Sharma Emotional Post | Virat Kohli | Test Match

வெல்லிங்டன்: சமூக வலைதளங்களில் தொடர்ந்து ரசிகர்களின் இணைப்பில் இருப்பவர்கள் விராட்கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி. விராட் கோலியுடன் தான் எடுத்துக்கொண்ட செல்பியை இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா சர்மா பதிவிட்டுள்ளார்.

மேலும் குட்பை சொல்வது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை என்றும் அவர் அந்த புகைப்படத்தின் கீழ் கேப்ஷனாக தெரிவித்துள்ளார்.
அந்த புகைப்படத்தை காட்டிலும் அனுஷ்காவின் இந்த கேப்ஷன் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,
சர்வதேச டி20 தொடரை வென்று ஒருநாள் தொடரை கைநழுவியுள்ளது.

21ம் தேதி டெஸ்ட் தொடர் துவக்கம்

21ம் தேதி டெஸ்ட் தொடர் துவக்கம்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்த அணியுடன் முதலில் மோதிய சர்வதேச டி20 தொடரின் ஐந்து போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது. இதேபோல அடுத்ததாக விளையாடிய சர்வதேச ஒருநாள் தொடரின் 3 போட்டிகளையும் நியூசிலாந்து வெற்றி கொண்டது. இந்நிலையில் இரு அணிகளும் வரும் 21ம் தேதி துவங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன.

காதலர் தினக் கொண்டாட்டம்

காதலர் தினக் கொண்டாட்டம்

இந்நிலையில் கடந்த 13ம் தேதி இந்திய அணியினர் நியூசிலாந்தின் புட்டாருரூவின் ப்ளூ ஸ்பிரிங்சில் விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் விராட் கோலியும் இணைய, அனுஷ்கா சர்மாவும் சேர்ந்து கொண்டார். இவர்களின் கொண்டாட்டத்தை முகமது ஷமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த கொண்டாட்டம் காதலர் தினக் கொண்டாட்டமாகவும் அமைந்தது.

அனுஷ்கா சர்மா உருக்கம்

அனுஷ்கா சர்மா உருக்கம்

இந்நிலையில் தன்னுடைய காதல் கணவன் விராட் கோலியுடன் தான் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனுஷ்கா சர்மா, குட்பை சொல்வது என்பது மிகவும் எளிதானதாக நீ நினைக்கலாம், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று தெரிவித்துள்ளார்.

9 லட்சம் லைக்ஸ்

9 லட்சம் லைக்ஸ்

இந்த பதிவு பகிரப்பட்ட இரண்டு மணிநேரங்களில் 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் ஏராளமான கமெண்ட்டுகளையும் ரசிகர்களிடம் இருந்து வாங்கியுள்ளது. அனுஷ்கா சர்மாவின் இந்த உருக்கமான பதிவிற்கு பலரும் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

Story first published: Monday, February 17, 2020, 18:18 [IST]
Other articles published on Feb 17, 2020
English summary
Anushka Sharma shared a selfie with Virat Kohli on Instagram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+