Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘படுக்கைக்கு அருகில் உள்ளது’.. கோலி - அனுஷ்கா திடீர் இன்ஸ்டா உரையாடல்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

மும்பை: இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தாலும், மனைவியிடம் அடங்கி தான் இருக்க வேண்டும் என காட்டியுள்ளார் விராட் கோலி.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டி ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது.

இதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியா பங்கேற்கிறது. இந்த தொடர் ஆக.4ம் தேதி முதல் செப்.14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பிசிசிஐ பபுள்

பிசிசிஐ பபுள்

ஐபிஎல்-ல் ஏற்பட்ட கொரோனா பிரச்சினை, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இந்திய அணி வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் பயோபபுளில் உள்ளனர். இந்திய அணி கேப்டன் கோலி மும்பையில் தான் வசித்து வருகிறார் என்பதால், வீட்டு தனிமையில் இருந்துவிட்டு, அவர் சமீபத்தில் தான் பபுளில் இணைந்தார்.

இன்ஸ்டா உரையாடல்

இன்ஸ்டா உரையாடல்

இந்நிலையில் மிகவும் சுறுசுறுப்பாக உடற்பயிற்சி, கிரிக்கெட் என சுற்றி வந்த விராட் கோலிக்கு பபுளில் டைம் பாஸ் ஆகவில்லை போல. இதன் காரணமாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்களில் பல்வேறு கேள்விகளுக்கு கோலி பதிலளித்த நிலையில், அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா திடீரென உரையாடலுக்குள் நுழைந்தார்.

 அனுஷ்காவின் குறுக்கீடு

அனுஷ்காவின் குறுக்கீடு

ரசிகர்களை போலவே அனுஷ்கா சர்மாவும், கோலியிடம் கேள்வி ஒன்றை கேட்டார். ஆனால் அது சற்று வித்தியாசமானது. அதில், எனது ஹெட்போன்ஸை எங்கே வைத்து விட்டு சென்றாய் என கேட்டார். இதற்கு பதிலளித்த விராட் கோலி, படுக்கைக்கு அருகில் உள்ள டேபிளில் தான் எப்போதுமே இருக்கும் அன்பே என வேடிக்கையாக பதிலளித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இதயம் போன்ற எமோஜியையும் அவர் அனுப்பியுள்ளார். அவர்களின் இந்த உரையாடல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

நெகிழ்ச்சி பதில்

நெகிழ்ச்சி பதில்

இதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர், விராட் கோலியிடம் அவரின் மகள் வாமிகாவின் புகைப்படத்தை எப்போது வெளியிடுவீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த கோலி, வாமிகா என்பது கடவுள் துர்கையின் மறுபெயராகும். எனவே வாமிக்காவுக்கு சமூக வலைதளம் என்றால் என்ன என்பது புரியும் நாள் வரை அவளை சமூக வலைதளங்களில் காண்பிக்க மாட்டோம். என் மகளே சொந்தமாக முடிவு எடுக்கும் போது தான் சமூக வலைதளங்களில் தோன்றுவார் என கூறியுள்ளார்.

Story first published: Sunday, May 30, 2021, 18:29 [IST]
Other articles published on May 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+