Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காதலாகி கசிந்துருகி... கணவனின் பிறந்தநாளில் அழகான புகைப்படங்களை வெளியிட்ட அனுஷ்கா!

அபுதாபி : நேற்றைய தினம் ஆர்சிபி கேப்டன் விராட் கோலியின் 32வது பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியது.

இதையொட்டி அவரது மனைவி அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட்டுடன் தான் இருக்கும் இரு அழகான புகைப்படங்களை பகிர்ந்தார்.

இந்த புகைப்படங்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும் லைக்குகளும் அளித்த நிலையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் சில எமோஜிகளுடன் கமெண்ட் செய்துள்ளார்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

நேற்றைய தினம் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். அவருக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நடிகர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், அவர் தன்னுடைய மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அழகான புகைப்படங்கள்

அழகான புகைப்படங்கள்

விராட் கோலியின் பிறந்தநாளையொட்டி அவரது மனைவி அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒன்றில் இருவரும் அணைத்தபடியும், மற்றொன்றில் விராட்டிற்கு முத்தம் கொடுத்தபடி அனுஷ்கா இருக்கும்படியாகவும் உள்ளன.

பிரியங்கா சோப்ரா கமெண்ட்

பிரியங்கா சோப்ரா கமெண்ட்

இந்த புகைப்படங்கள் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் லைக்குகளையும் பெற்றுள்ளன. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் லவ் உள்ளிட்ட எமோஜிகளுடன் கமெண்ட் செய்துள்ளார். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவருக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் தற்போது அனுஷ்கா கர்ப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோப்பையை கைப்பற்ற கோலி தீவிரம்

கோப்பையை கைப்பற்ற கோலி தீவிரம்

இந்நிலையில் ஆர்சிபி அணி எலிமினேட்டர் சுற்றில் இன்று சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதுவரை ஐபிஎல் கோப்பையை ஒருமுறைகூட வெற்றி கொள்ளாத ஆர்சிபி மற்றும் விராட் கோலி, இந்த முறை கோப்பையை கைப்பற்ற மிகுந்த முனைப்புடன் உள்ளனர்.

Story first published: Friday, November 6, 2020, 12:56 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+